2026 Rasi Palan: 2026-ல் இந்த 5 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள்.! வீடு, நிலம், தங்கம் சேருமாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Dec 16, 2025, 10:49 AM IST

5 Zodiac Signs Will Buy New House in 2026: 2026 ஆம் ஆண்டில் சில ராசிகளுக்கு சொத்துக்களை குவிக்கும் யோகம் இருக்கிறதாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
2026 New Year Rasi Palan:

2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. பிறக்க இருக்கும் புத்தாண்டு எப்படி இருக்க போகிறது என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் நடந்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக சில ராசிகளுக்கு திருமணம், சொத்துக்கள், தொழில் போன்றவற்றில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சொத்துக்களை வாங்கும் யோகம் உள்ள ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். துலாம் ராசியினர் இந்த காலகட்டத்தில் சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிலம், மனை போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகும். பழைய வீட்டில் வசித்து வருபவர்கள் வீட்டை மராமத்து செய்தல் அல்லது புதிய வீட்டிற்கு குடிபோதல் போன்றவற்றை செய்வீர்கள். நிலம், சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து அனைத்தும் உங்களுக்கு சாதகமானதாக மாறும்.

36
மகரம்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டத்தை வழங்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். உங்கள் தொழில் சிறப்பானதாக மாறும். எதிர்பாராத பண வரவால் சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். கடந்த காலங்களில் சொத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அது கைகூடாமல் போனவர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாக சொத்துக்களை வாங்குவீர்கள்.

46
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் வீடு வாங்குவது, வீடு கட்டுவது, நிலம் தொடர்பான சூழல்கள் சாதகமாக வரும். சனி பகவானின் செல்வாக்கு காரணமாக சொத்துக்கள் சேரத் தொடங்கும். சனி பகவான் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருப்பதால் வீடு கட்டுவதில் அவசரப்பட வேண்டாம். ஏற்கனவே நிலமர இருந்தால் அதில் வீடு கட்டுவதற்கான சரியான திட்டங்களை வகுத்து வீடு கட்ட தொடங்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த ஆண்டு கண்டிப்பாக சொத்துக்களை வாங்குவீர்கள்.

56
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு சிறந்த பலன்களைக் கொடுக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த காலகட்டத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும் அல்லது வாரிசுகளுக்கு கிடைக்கும். வீடு சொத்துக்கள் வாங்குவதற்காக யோசித்து கொண்டு இருந்தால் இந்த ஆண்டு அந்த கனவுகள் நிறைவேறும். இந்த ஆண்டில் வருமானம் அபரிமிதமாக இருப்பதால் சொத்துக்கள் வாங்கும் ஆசை நிறைவேறும்.

66
மேஷம்

2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் வீடு சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த பணப் பிரச்சினைகள், கடன் பிரச்சனைகள் தீரும். சேமிப்பு உயரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிகளில் கடன்களை எளிதில் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சொத்து பிரச்சனைகளும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளும் உங்களுக்கு சாதகமாக வரும். எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக ஏதாவது அசையா சொத்துக்களில் முதலீடு செய்து, எதிர்காலத்திற்கு தேவையான வலுவான அடித்தளத்தை அமைப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories