மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள். 2026 ஆம் ஆண்டு சனி பகவான் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தருவார். அரசு அனுமதி பெறுதல், ஒப்பந்த பணிகள் இறுதி செய்தல், நிர்வாக ரீதியான வேலைகளில் வெற்றி கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பொறியியல், நீதித்துறை, சட்டம், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குறிப்பு: அரசு வேலைக்கு தயாராகி வருபவர்கள் கடின உழைப்பையும், முயற்சியையும், பயிற்சியையும் கைவிடக்கூடாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இரு மடங்கு பலன் கிடைக்கும். இந்த ஜோதிடப் பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் தசா புத்தி பலமாக இருந்தால் இந்த வாய்ப்புகள் முழுமையாக கைகூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)