செப்டம்பர் 29 அன்று சந்திரன் கும்ப ராசியில் நுழையும் போது மகரம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய செல்வ அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. சிறிய அளவிலான வியாபாரம் செய்து வந்த ஒருவர் திடீரென அரசு ஒப்பந்தம் பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைவார். தொழில், வியாபாரம், அரசாங்க திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய நன்மை. வெளிநாட்டில் வேலை செய்யும் மகரம் ராசிக்காரர்கள் உயர்ந்த பதவி பெறுவர். நிலம், வங்கி சேமிப்பு, வியாபார லாபம் ஆகியவற்றில் அபரிமிதமான வளர்ச்சி கிட்டும். உழைத்துப் பெற்றதை சேமித்து முதலீடு செய்தால் மகரம் ராசிக்காரர்கள் பில்லியனீர் பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு உயர்வடைவார்கள்.
செலவை குறைத்தால் லிஸ்டுல உங்க பேர்
இந்த காலத்தில் பணம் அதிகமாக வரும். ஆனால் அதே சமயம் மனக்குழப்பம், ஆடம்பரச் செலவு, வீண் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற கடன் வாங்க வேண்டாம். குடும்ப உறவுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். பரிகாரமாக திங்கள்கிழமையில் சந்திர பகவானுக்கு பால், வெள்ளை பூவால் வழிபாடு செய்யவும். வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானுக்கு நெய்வேத்யம் செய்து வணங்கவும்.