இதனையடுத்து அன்புமணியின் அறிவித்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க ராமதாஸ் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்று விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதும்,
விசாரணை தற்போது வேண்டாம் என கூறிய நீதிபதி இன்று மாலை 5.30 மணிக்கு எனது அறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் ஆஜராகும் படி கூறினார். மேலும் இது உத்தரவு அல்ல, வலியுறுத்தல் என்று நீதிபதி தெரிவித்தார். பாமகவின் எதிர்காலம் யார் கையில் என்ற நிலை நீடித்து வந்த நிலையில் அன்புமணி மற்றும் ராமதாசை நீதிபதி தனது அறைக்கு வரும்படி அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.