ரியல்மியின் புது ஸ்மார்ட்வாட்ச்... ரூ. 2 ஆயிரம் விலையில் இவ்வளவு அம்சங்களா?

By Kevin Kaarki  |  First Published May 18, 2022, 4:44 PM IST

ரியல்மி நிறுவனம் நார்சோ 50 5ஜி மற்றும் நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. 


ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி டெக்லைப் ஸ்மார்ட்வாட்ச் உடலில் காய்ச்சல் அடிக்கிறதா என்பதை கண்டறிந்து தெரிவிக்கும் சென்சார் கொண்டிருக்கிறது. 

முன்னதாக மார்ச் மாத வாக்கில் ரியல்மி டெக்லைப் வாட்ச் S100 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 24 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், நோட்டிபிகேஷன், வாட்டர் ரெசிஸ்டண்ட்  மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 அம்சங்கள்:

- 1.69 இன்ச் 240x280 பிக்சல் கலர் டச் டிஸ்ப்ளே
- 110-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள்
- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மாணிட்டர்
- ப்ளூடூத் 5.1
- 24 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆட்டோமேடெட் ஹார்ட் ரேட் மெஷர்மெண்ட், SpO2 மாணிட்டர்
- மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், பிளாஷ்லைட்
- ஸ்கின் டெம்பரேச்சர் மாணிட்டரிங்
- கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர்
- 260mAh பேட்டரி
- 12 நாட்கள் பேட்டரி லைஃப்

புதிய ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் லேக் புளூ மற்றும் மேஜிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 22 ஆம் தேதி ரியல்மி வலைதளம், அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்க இருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் மட்டும் இன்றி ரியல்மி நிறுவனம் நார்சோ 50 5ஜி மற்றும் நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் மிட் ரேன்ஜ் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 

click me!