மதுரை பொருட்காட்சி: மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..!! அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்..!!

Published : Feb 10, 2020, 10:02 PM IST
மதுரை பொருட்காட்சி: மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..!! அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்..!!

சுருக்கம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் தனியார் நடத்தும் பொருட்காட்சியில் ஏர் பலூனில் விளையாடிய போது  அதில் உள்ள காற்று இறங்கியதால் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால்,தனியார் அமைப்புகள் நடத்திடும் பாதுகாப்பற்ற பொருட்காட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மாநகரட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

BY.T.Balamurukan

  மதுரை, தமுக்கம் மைதானத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சி எப்போதுமே பிரபலம். ஆனால், மாநகராட்சிக்கு வாடகை கிடைக்கிறது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல்வேறு தனியார் அமைப்புகள் பொருட்காட்சியை நடத்திவருகின்றனர். இந்த பொருட்காட்சி ஏற்பாட்டில் எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்படுவதில்லை. தற்போது மதுரை தமுக்கத்தில் 'டிரை மேக்' மற்றும் 'கிரியாஸ்' இணைந்து பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இன்று மட்டும் குழந்தைகள் விளையாட கூடிய ஏர் பலூன் மேலே  குழந்தைகள் ஏறி  விளையாடிக் கொண்டிருந்த  போது எதிர்பாராதவிதமாக காற்று இறங்கி பலூன்களில் குழந்தைகள் சிக்கிக்கொண்டனர். இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு காயம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் இதனை சட்டை செய்யாது தொடர்ந்து பொருட்காட்சி நடத்திய தனியார் நிர்வாகம் அதனை இயக்கி வந்தனர்.

 பள்ளிகள் மூலம் மோசடி டிக்கெட் வினியோகம்.இந்த பொருட்காட்சிக்கு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக டிக்கெட்டுகளை பள்ளிகளுக்கு சென்று பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் விநியோகித்து உள்ளனர். ஆனால் நுழைவு கட்டணம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.. இதனால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பாதுகாப்பு இல்லாமல் இதுபோன்ற நடைபெறும் பொருட்காட்சிகளுக்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.
பாதுகாப்பு இருக்கிறதா என்பதை கண்கணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாகவும்,நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுகின்றது.

PREV
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?