நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. அதில் நான் மிகச் சோர்வாகி விட்டேன், அதில் இருத்து மீள பிக்பாஸ் நிக்ழ்ச்சி எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மீண்டும் என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.
பிக்பாஸ் போட்டி நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், கடந்த வாரம் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அவரின் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கவினுக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், கவின் போட்டியிலுருந்து வெளியேறக்கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் கவின் அறிவித்தபடி போட்டியிலுருந்து வெளியேறினார். பிறகு அவர் எடுத்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் ஏன் வெளியேறினேன் என்று கடிதம் மூலம் விளக்கியுள்ளார் கவின். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு :-
undefined
எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதென்றே தெரியவில்லை... எல்லா பிரச்சினைகளையும் முடித்துவிட்டு பிறகு நிதானமாக பேசலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதே என் பிரச்சினைகளை உங்களிடம் பகிருந்து கொள்கிறேன். நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டாலும் என்னை கொஞ்சம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்... நான் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தேன், ஏனோ நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. அதில் நான் மிகச் சோர்வாகி விட்டேன், அதில் இருத்து மீள பிக்பாஸ் நிக்ழ்ச்சி எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மீண்டும் என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அதில் கொஞ்சம் பணத்தையும் கொஞ்சம் புகழையும் எதிர்பார்த்து வந்தேன்.
நான் யார் என்பதை அதில் நிரூபிக்க விரும்பினேன், ஆனால் தற்போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. இப்போதும் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது, என்னால் மகிழ்ச்சியாகக் கூட இருக்க முடியவில்லை, ஆனால் நீங்கள் என்மீது காட்டிய அன்பிற்கு எப்போதும் நன்றி... நீங்கள் காட்டிய அன்பிற்கு அன்பு காட்டுவதற்கு முன்னாள் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ என்று தெரிந்திருந்தும் கூட சில நேரங்களில் நான் உணர்ச்சிவயப்பட்டு இருக்கிறேன் சில நேரங்களில் சகப் போட்டியாளர்களை காயப்படுத்தி இருக்கிறேன் அதை நான் ஒருபோதும் நியாயப்படுத்த போவதில்லை.
நீங்கள் என்மீது காட்டிய அன்பை நான் ஏற்றுக் கொண்டதைப் போல சிலர் காட்டிய வெறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், என் மீது சிலர் காட்டிய வெறுப்பையும் அன்பாக மாற்ற முயற்சிக்கிறேன். என் அன்பிற்குரியவர்களே, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நீங்கள் நல்ல பாடத்தை கற்பித்தீர்கள். நம் உறவு இத்துடன் முடிந்து போவதில்லை, நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு நான் எப்போதும் உங்களுக்கு கடமைப் பட்டவனாக இருக்கிறேன் நான் செய்தது ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தால் தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள். எப்போதும் போல கூட இருங்க... எல்லோரும் நல்லா இருப்போம்... என்று அவர் பதிவிட்டுள்ளார்