அடேங்கப்பா!! நயன்தாரா ஹேண்ட் பேக் விலை இத்தனை லட்சமா? தலை சுற்ற வைக்கும் விலை!!

Published : May 06, 2025, 03:33 PM IST
அடேங்கப்பா!! நயன்தாரா ஹேண்ட் பேக் விலை இத்தனை லட்சமா? தலை சுற்ற வைக்கும் விலை!!

சுருக்கம்

நடிகை நயன்தாராவின் விலையுர்ந்த ஹேண்ட் பேக் குறித்த சிறப்பு தகவல்களை இங்கு காணலாம்.     

Actress Nayanthara Hand Bag Rate : நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர். தன் திருமணத்துக்கு பின்னரும் திரையுலகில் வலம் வரும் நடிகை, நயன்தாரா. அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் நடிப்பு பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நயன்தாரா நடிப்பில் அண்மையில் டெஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை. அடுத்தடுத்து மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் போன்ற படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ளன. 

சர்ச்சைகள்: 

திரையுலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் நயன்தாரா விதிவிலக்கு அல்ல. திருமணத்திற்கு பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்ற விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவ்வளவு சர்ச்சைகளையும் கடந்து வந்தவர் நயன். 

நெட்பிளிக்ஸில் அவரது திருமணம் குறித்த ஆவணப்படம் வெளியாகும்போது மீண்டும் நடிகர் தனுஷூடன் காப்பிரைட் மோதல் ஏற்பட்டது. அதன் பின் 3 பத்திரிகையாளர்கள் குறித்து பேசியது உள்பட தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு விவகாரத்தில் அவர் பெயர் சிக்காமல் இல்லை. ஆனாலும் தன் நடிப்பிலும், குடும்பத்திலும் மட்டுமே அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அடிக்கடி குடும்பத்தோடு  வெளிநாடுகளுக்கு பயணிக்கும் அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின. 

நயன் தாரா ஹேண்ட் பேக்: 

ஐரோப்பாவுக்கு சென்றபோது நயன்தாரா எடுத்த சில புகைப்படங்களில் அவர் பயன்படுத்திய ஹேண்ட் பேக் தனித்துவமாக தெரிந்தது. அதன் விலை தான் கொஞ்சம் அதிகம். அது பிராடா என்ற பிராண்ட் ஹேண்ட் பேக்.  இந்த பிராண்ட் 1913ஆம் ஆண்டிலிருந்து பேஷன் உலகில் இயங்கி வருகிறது. இந்த பிராண்டில் குறைந்தபட்ச விலையே லட்சங்கள் தான். நடிகை நயன்தாரா வைத்துள்ள பேக்கின் விலை இரண்டு லட்சம் ரூபாயாம். ஒரு ஹேண்ட் பேக் விலையே இரண்டு லட்சமா? என இணையவாசிகள் ஷாக் ஆகிவிட்டனர். 

உலகின் விலையுர்ந்த பேக்: 

ஒப்பிட்டளவில் நயன்தாரா பயன்படுத்தும் ஹேண்ட் பேக் சாதாரணமானது தான். ஏனென்றால் உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மனைவி நீதா அம்பானி தான் 
உலகின் மிக விலையுயர்ந்த ஹேண்ட் பேக் வைத்திருக்கிறார். அதன் விலை கூட கிட்டத்தட்ட 30 முதல் 40 லட்ச ரூபாயாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆபாசப் படம் பார்ப்பதைத் தடுக்க ஆதார் சரிபார்ப்பு.. புதிய ஐடியா கொடுத்த உச்ச நீதிமன்றம்!
பிக் பாஸ் வீட்டில் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த தடையா? மியூட் பண்ணியதால் வில்லங்கத்தில் சிக்கிய விஜய் டிவி