தேனியில் ஜெயிக்கப்போவது யாரு? மூணு பக்கமும் செம்ம டஃப் பைட்... தொகுதி முழுக்க தாறுமாறான அலசல்

By sathish kFirst Published Apr 4, 2019, 12:24 PM IST
Highlights

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.  

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.  

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.  

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் தான் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவார் என தகவல்கள் வந்தத நிலையில் தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இவர் அங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாகத்தான் தற்போது லோக்சபா தேர்தலில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். 

ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்செல்வன் உள்ளூரில் பெரிய அளவில் பிரபலமானவர். தேனி முழுக்க எல்லோருக்கும் தெரிந்த வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்தான். இது அமமுக கட்சிக்கு பெரிய பலமாக இருக்கும். அதே சமயம் அதிமுகவாக்குகளை பல்க்காக பிரிப்பார்.   எம்எல்ஏவாக வந்து பெரிதாக மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, தங்க தமிழ்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. எப்படி இருந்தாலும் அதிமுகவின் மிக அதிகமான வாக்குகளை  பிரிப்பார் என தினகரன் பல்வேறு திட்டங்களோடு தங்க தமிழ்செல்வனை இங்கு களமிறக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திநாத் நிறுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தினகரன் இந்த அதிர்ச்சியை அளித்துள்ளார்.  தங்கதமிழ் செல்வன் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக அவர் தேனி வந்ததும் . அவருக்கு அமமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.  தேனி நகருக்கு நுழைந்த தங்க தமிழ் செல்வனுக்கு தொண்டர்களும்,  பொது மக்களும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்தனர். தங்கதமிழ் செல்வனுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பார்த்து  ஓபிஎஸ் கேங்  தனது குடும்பத்தோடு கணக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறது.

அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  ஓபிஎஸ் மகன் களமிறங்குவதால் பணம் விளையாடும், சொந்த செல்வாக்கு, கட்சி வாக்கு, கட்சியின் சின்னம் என இருப்பதால் ரிஸ்க் எடுக்க தயங்கிய திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலையில் கட்டிவிட்டது. ஆனால், ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க மொத்த  பிளானையும் தினகரன் தீட்டுவதால்,  காங்கிரசுக்கு ப்ளஸாக அமையும் சூழல் அமைந்துள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வலுவான இடமான ஈரோட்டில் இருந்து மாறி தற்போது தேனியில் போட்டியிடுவதே பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  தேனியின் காங்கிரஸ் கொஞ்சம் வலுவான கட்சி,  அதேபோல திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவும் கணிசமாக கிடைக்கும். இதனால் தேனியில் மிக முக்கியமான  வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாறியுள்ளார். ஆனால் முல்லைப்பெரியாறு பிரச்சனையில்  காங்கிரஸ் அந்தர் பல்டி அடித்தது போன்ற பல சிக்கல்களை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சந்திக்க வாய்ப்புள்ளது. 

அதிமுக சார்பாக ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவருக்கு இப்போதே ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓ.பன்னீர்செல்வமின் சட்டமன்ற தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டுள்ளார்.  கடந்த சில வருடங்களாகவே ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால்,  இதனைத் தொடர்ந்து மகனை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் ஓபிஎஸ் அரசியல் களத்தில் இறக்கினார். 18 வயதில் இருந்து அதிமுகவில் இருந்தாலும் பெரிய அளவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை,  மாவட்ட ஜெ பேரவை  செயலாளர் பதவியை ரவீந்திர நாத்துக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தால் போதும். தாம் சிபாரிசு செய்யவேண்டிய அவசியம் இல்லை, கட்சியே ரவீந்திரநாத் சீட்  கொடுக்கும் என்பதால். தொடர்ந்து  கட்சிப்பணியில் ஈடுபடுத்தி வந்தார்.  இந்நிலையில் இந்த தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு சீட் கிடைத்துள்ளதால் ஸ்டார் வேட்பாளர் லிஸ்டில் முன்னணியில் உள்ளார். இவருக்காக பாஜக தேசிய தலைவர்கள் எல்லாம் வந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.  

ரவீந்திரநாத்க்கு தற்போது ஓபிஎஸ் குடும்பத்தினர் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓபிஎஸ் தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் களமிறக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் தனது மகனுக்கு சீட் கொடுத்துள்ளதைக்கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் சமூகத்தினர் மட்டுமே உற்சாகத்தில் உள்ளனர் ஆனால், ராஜன் செல்லப்பா மற்றும் செல்லூர் ராஜு டீம் பயங்கர அப்செட்டாம். 

சொந்த கட்சியில் இப்படி அதிருப்தியில் இருப்பவர்கள் உள்ளடி வேலைகள் செய்வது ஒருபுறமிருக்க, நேரடியாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்க மிக வலிமையான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை தினகரன் களமிறக்கி இருக்கிறார் என்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டார்கெட் என்னன்னா? திமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஓபிஎஸ் மகன் ஜெயிக்கக்கூடாது. இது மானப்பிரச்சனை. மொத்தமா வாஸ் அவுட் ஆனாலும் இந்த ஒரு தொகுதி ஜெயிச்சாலே பாதி ஹேப்பி கெடச்சிடும் என சொல்லியிருக்கிறாராம்.  அதேபோல, ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய சில இடங்களில் விழும் வாக்குகளும், அதிருப்தியில் உள்ளவர்களை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக திருப்பி விடவும் பிளான் போட்டுள்ளாராம்.

click me!