அண்ணன் மகனுக்காக அதகளம் பண்ணும் ஓ.ராஜா!! லட்சக்கணக்கில் பரிசுப்பொருட்கள்... வேட்டையாடும் தேர்தல் பறக்கும் படை

By sathish k  |  First Published Apr 4, 2019, 11:37 AM IST

தேனி பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி போடுகிறார். தனது அண்ணன் மகனான ரவீந்திரநாத் ஜெயித்தே ஆகவேண்டும் என ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா வாக்காளர்களாய் கவரும் விதமாக பல்வேறு பருப்பொருட்களை தேனிக்கு இறங்கியிருக்கிறார்.


தேனி பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி போடுகிறார். தனது அண்ணன் மகனான ரவீந்திரநாத் ஜெயித்தே ஆகவேண்டும் என ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா வாக்காளர்களாய் கவரும் விதமாக பல்வேறு பருப்பொருட்களை தேனிக்கு இறங்கியிருக்கிறார்.

இந்நிலையில்,  வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரும் தேர்தல் களத்தில் குதித்து வாக்காள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதுபோல் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜாவும் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரவீந்திரநாத்க்கு ஓட்டுப் போடச் சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

இப்படி ஓ.பி.எஸ். குடும்பம் மக்களை சந்திக்க போகும்போது ஏற்கனவே சேலை, வேஷ்டிகளை அவர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் மீண்டும் வாக்காள மக்களுக்கு சேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரட்டை இலை சின்னம் பதித்த சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகளை சென்னையிலிருந்து, பண்டல் பண்டலாக கம்பத்திற்கு வந்திருக்கிறது. இப்படி, அப்படி வந்த இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் கம்பம்  பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் பண்டல், பண்டலாக சேலைகள் குவிந்து கிடப்பதாக மாவட்ட தேர்தல் அதிகார்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி, சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன், சுபா டிராவல்ஸ் அலுவலகத்திற்குச் சென்று, அங்கே கிடந்த பண்டல்களை சோதனை செய்தனர். அதில் இரட்டை இலை பதித்த சுமார் 10000 சேலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி டிராவல்ஸ் பணியாளர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின்னான பதில் கூறியுள்ளனர். 

இதனால் விசாரணை திருப்தியில்லாததால் இரட்டை இலை படம் போட்ட சேலைகளின் பண்டல்களை கைப்பற்றி உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்யபாமாவிடம் ஒப்படைத்தனர்.  

click me!