வன்னியர்கள் ஹீரோ காடுவெட்டி குருதான்!! சொந்த வாக்கு வங்கியை இழக்குமா பாமக? அதிர்ச்சியில் அன்புமணி!

By sathish k  |  First Published Mar 20, 2019, 1:10 PM IST

நாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர். 


நாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர். 

வட தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள, வன்னியர்களின் ஓட்டுகளை, பாட்டாளி மக்கள் கட்சி தன் வசம் வைத்துள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அன்புமணியின் முரட்டு விமர்சனங்களை பொருட்படுத்தாமல், பாமகவுக்கு  7 நாடாளுமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா என பாமகவுக்கு தூக்கி கொடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

கடைசியாக, 2016 சட்டசபை தேர்தலில், 232 இடங்களில் போட்டியிட்ட, பாமக 2.30 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றது. பதிவான ஓட்டுகளில் அது, 5.36 சதவிகிதம் மட்டுமே. திமுக - அதிமுக. ஓட்டு வங்கிகளோடு ஒப்பிடுகையில், இது மிக மிக சொற்பம். ஆனால், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், பாமக வின் ஓட்டு வங்கி பெருமளவில் உதவும் என்று நம்பியே பாமகவிற்கு 7 தொகுதிகளை கொடுத்தது அதிமுக.  கடந்த காலங்களில் வன்னியர் சங்கத்தின் பலத்தில், சொந்த செல்வாக்கில் மட்டுமே இருந்த பாமக தற்போது காடுவெட்டி குருவின் மறைவால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. 

வன்னியர் சங்கம் என்றாலே நினைவுக்கு வருவதே காடுவெட்டியோ குடு மட்டும் தான், வன்னிய இளைஞர்களை பொறுத்தவரை அவர் தான் ஹீரோ. பாமகவின் வெற்றியில் குருவின் பங்கு தான் அதிகம். இப்படி இருக்கையில் காடுவெட்டி குறு குடும்பத்துடன் ஏற்பட்ட முட்டல், மோதலால் பேரிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

கடந்த திமுக 2006ல் பாமக காங்கிரஸ்  ஆதரவில் ஆட்சி நடத்திவந்த திமுகவிற்கு ராமதாஸ் கடுமையாக இடைஞ்சல் கொடுத்து வந்தார்.  இதனால் கடுப்பான கலைஞர் பாமகவை கழட்டி விட்டார் இதற்க்கு காரணம் காடுவெட்டி குருவின் காரசாரமான பேச்சு தான். கருணாநிதியை மட்டுமா காட்டமாக பேசினார்? பாமக ஆண்டுதோறும் நடத்தும், சித்திரை திருநாள் நிகழ்ச்சியில், காடுவெட்டி குருவின் பேச்சு தான் ஹைலைட்டே பேச்சை கேட்பதற்காகவே வன்னிய இளைஞர்கள் வருவார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் குரு தான் டார்கெட்.

மூன்று முறை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குருவை சிறையில் தூக்கிப்போட்டார் ஜெயலலிதா. இந்த அடக்குமுறைகள், குரு வன்னிய இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக அவதரித்தார். தேர்தல் சமயத்தில் நிதி வேண்டும் என ராமதாஸ் காடுவெட்டி குருவிடம் தான் கேட்பாராம். அப்போது  தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து கோடிக்கணக்கில் நிதி வசூலித்து வருவாராம். ஆனாலும் அந்த காசில் ஒரு பைசா கூட எடுக்காமல் கட்சியில் கொடுத்து விடுவாராம்.

குருவின் திறமையால் பாமக வளர்ந்தது ஆனால், அவரை ராமதாஸ் குடும்பம் புறக்கணித்தது என்றே வன்னிய சமூகத்தினர் கருதுகின்றனர். குரு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் ராமதாஸ் குடும்பம் போதுமான உதவிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை, குருவின் குடும்பம் சுமத்துகிறது. ஒருபக்கம், பாமக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய  காடுவெட்டி குரு மகன் மற்றும் விஜிகே மணி பிளான் போட்டுக்கொண்டிருக்க. இன்னொரு பக்கம் பாமகவில் இருந்து வெளியே வந்த வேல்முருகனும் பழைய பகைக்கு பழி தீர்க்க காத்துக்கொண்டிருக்கிறாராம்.  

வன்னிய  வாக்கு வங்கியை பயன்படுத்தி ராமதாஸ் குடும்பம், தங்களின் செல்வத்தை பெருக்கியுள்ளது என வன்னிய சமூகத்தின் இடையே நிலவுகிறது. வன்னியர் சங்க அறக்கட்டளையை நிறுவிய ராமதாஸ், உலகெங்கும் உள்ள வன்னியர்களிடம் பிற்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பல கல்லூரிகளை தொடங்க வாக்குறுதி அளித்து, நிதி வசூல் செய்து கல்லூரி தொடங்கப்பட்டது. அனால் அந்த கல்லூரிக்கு சரஸ்வதி சட்டக் கல்லுாரி என்று தன் மனைவி பெயரை வைத்துள்ளார் ராமதாஸ்.

ஓபிஎஸ், இபிஎஸ்ஸை "டயர் நக்கி"  என்று தாறுமாறாக விமர்சித்தும், கவர்னரிடம் ஊழல் புகார் அளித்த இதே அன்புமணியும் ராமதாசும். பதவிக்காக எந்த சமரசத்தையும் செய்யக் கூடிய சராசரி அரசியல்வாதியாக சொந்த சமூதாய மக்கள் மத்தியிலேயே சமாளிக்க முடியாமல் நிற்கின்றனர்.

இப்படி நாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர். அதிமுக வட தமிழகத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலே, நிச்சயம் வெற்றி என்ற நிலையி தாண்டி, பாமகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு பேரிழப்பை சந்திக்கப்போவது தான் கொடுமை.

click me!