ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தேனி தொகுதியில் நிற்கும் விவேக்!! சசிகலாவின் மாஸ்டர் மூவ்... டபுள் ஓகே சொன்ன தினகரன்!

By sathish k  |  First Published Mar 20, 2019, 11:10 AM IST

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் போட்டியிடவுள்ளார். பழைய பகைக்கு பழி தீர்க்கும் விதமாக சசிகலா தனது அண்ணன் மகன் ஜாஸ் விவேக்கை களத்தில் இறக்கிவிட நினைக்கிறாராம். தினகரனும் இதையே விரும்புகிறாராம்.
 


நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் போட்டியிடவுள்ளார். பழைய பகைக்கு பழி தீர்க்கும் விதமாக சசிகலா தனது அண்ணன் மகன் ஜாஸ் விவேக்கை களத்தில் இறக்கிவிட நினைக்கிறாராம். தினகரனும் இதையே விரும்புகிறாராம்.

சில தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேனி தொகுதியில் யாரை போட்டியிட வைக்கப்போறீர்கள் எனக் கேட்டதற்கு பதிலளித்த தினகரன், தேனி என் தொகுதிதான், என்னை கூட அங்க நிக்க சொல்லி கட்சிக்காரங்க கேட்குறாங்க. நான் கூட அங்க நிக்கலாம் எனக் கூறினார். தேனி மக்களவைத் தொகுதியில்  ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் நிலையில்,  தினகரன் களமிறங்கி தோற்கடிக்கப் பிளான் போடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பரப்பன அக்ராஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வேட்பாளர் பட்டியலைக் காட்டிய தினகரனிடம் நீங்க என்ன செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும் உங்கள் விருப்பப்படி பண்ணுங்க என உற்சாகப்படுத்தியிருக்கிறார். அப்போது சசிகலாவை கண் சிவக்க வைக்கும் அளவிற்கு தினகரன் ஒரு மேட்டரை சொல்லியிருக்கிறார். அது என்னன்னா? தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் நிற்க உள்ள சித்தி தான் அது. இந்த மேட்டரால் கடுப்பான சசிகலா இந்த தொகுதியில் பன்னீர் மகன் ஜெயிக்கவே கூடாது அதற்காக நம்ம கட்சியில் உள்ள சரியான ஆள் யாரு இருக்காங்க எனக் கேட்டுள்ளார். அப்பேது தங்க தமிழ் செல்வனை நிறுத்தலாமா எனக் கேட்டுள்ளார்.

துணைமுதல்வராக இருக்கும் பன்னீர் தனது மகனை ஜெயிக்க வைக்க தண்ணி போல செலவு செய்வார். அந்த அளவுக்கு செலவு செய்ய யார் இருக்கிறார்கள் என பார்த்தால் பசை உள்ள ஆட்கள் இல்லை என்பதாலும், யங் வேட்பாளர் இறக்கினால் மட்டுமே டஃப் பைட் கொடுக்க முடியும் என்பதால் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஒவுமான விவேக்கை நிறுத்தத்தால் நன்றாக இருக்கும் என சசி சொல்லியிருக்கிறார். இதற்க்கு மறுப்பே சொல்லாமல் டபுள் ஓகே சொன்னாராம் தினகரன்.

முதலில் இங்கே விவேக் நிற்பதாகத்தான் பேசப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி இங்கே 5 முறை கடந்த 20 நாட்களுக்குள் விவேக் வந்து போயிருக்கிறார். விவேக்கிற்கும், தனது குடும்பத்திற்கு இப்படி துரோகம் பண்ணிவிட்டார் பன்னீர் என்ற ஆதங்கம் இருப்பதால், ஓ.பன்னீரின் குடும்ப அரசியலை விமர்சிக்கும்  விமர்சித்தும் வேண்டிய அளவிற்கு பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளாராம்.

click me!