நெல்லை தொகுதியில் போட்டியிடும் அண்ணாச்சி மகன்!! வைகுண்டராஜனின் மூவால் மனமுடைந்த பீட்டர் அல்போன்ஸ்

By sathish k  |  First Published Mar 9, 2019, 10:38 AM IST

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க எந்தத் தொகுதிக்கு யார் யார் சீட்டு கேட்டிருக்கிறார்கள் என்ற விவாதம் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு தொகுதியிலும் விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. நெல்லை தொகுதியை காங்கிரஸுக்கா இல்ல திமுகவுக்கா என்ற பெரும்  குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். காரணம், திமுகவில் வைகுண்டராஜன் மகனும், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸும்,  சீட் கேட்கிறார்களாம்.


நெல்லை தொகுதியை காங்கிரஸுக்காக அல்போன்ஸும்,  இல்ல திமுக சார்பில் போட்டியிடக் கேட்டிருக்கும்  வைகுண்டராஜன் மகனுக்கா என்ற குழப்பம் நீடித்துள்ளது. இந்த வகையில் நெல்லை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ் வைகுண்டராஜனின் மகன் திமுக சார்பில் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இதனால் நெல்லைத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவதில் என்பதில் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளாராம்.
 
VV மினரல்ஸ் வைகுண்டராஜன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தவர். ஒவ்வொரு தேர்தலின் போதும் அண்ணாச்சியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி தென் மாவட்டத்தில் பலமாக எழும். பின், தாதுமணல் விவகாரங்களில் விவிக்கு எதிராக அதிமுக ஆட்சியே கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. 

Tap to resize

Latest Videos

கடந்த கால தேர்தல்களில் கெத்து புள்ளியாக இருந்த வைகுண்ட ராஜனை வெத்து மையாக மாற்றியது சசிகலா புஷ்பா விவகாரம், இதனையடுத்து நடந்த சில ரெய்டுகள் உச்சகட்ட மனஉளைச்சலை ஏற்படுத்து தொழிலில் பெரும் சரிவை சந்தித்துள்ள அண்ணாச்சி.  கடந்த தேர்தல்களை விட இந்த முறை, ‘அண்ணாச்சியின் மகன்களில் ஒருவர் நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. வைகுண்டராஜனுக்கு சுப்பிரமணியன், வேல்முருகன் என இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த ஒருவரில் ஒருவர் தேர்தல் களம் காணலாம் என்கிறார்கள். இதற்காகவே வைகுண்டராஜனின் மகன்களில் ஒருவர் திமுக முக்கியஸ்தரைப் பார்த்துப் பேசியிருக்கிறார்” என்றும் நெல்லையில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

நெல்லை தொகுதியை காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் கேட்டு சில மாதங்களுக்கு முன்பிருந்தே  ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இப்போது வைகுண்டராஜனின் மகனை மையமாக வைத்து நெல்லை தொகுதியில் தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

click me!