பொய் சொல்கிறார் துரை முருகன்!! குண்டு போடும் தேமுதிக நிர்வாகிகள்...

By sathish k  |  First Published Mar 7, 2019, 2:10 PM IST

திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகவே பார்க்கச் சென்றோம். அவரிடம்  அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே துரைமுருகனை நானும், முருகேசனும் சந்தித்தோம். துரைமுருகன் பொய் பேசுகிறாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். சேலம் மாவட்ட தேமுதிக செயலாளர் இளங்கோவன் சென்னையில் எல் கே சுதீஷ் முன்னிலையில் செய்தியாளர்களிடம்  பெரிய பெரிய குண்டு போட்டுள்ளனர்.


நேற்று தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரம் திமுகவுடனும்  சுதீஷ் பேசி இருக்கிறார். சுதீஷ் நேற்று துரைமுருகனிடம் போன் செய்து பேசியுள்ளார். இதுகுறித்து துரைமுருகன் கொடுத்த பேட்டியும் தேமுதிக மக்கள் மத்தியில் மானத்தை பறிகொடுத்துள்ளது.  

ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக, போன் சொன்னது. பின், தொடர்பு கொண்டபோது, அவர் துாங்குவதாக கூறினர். 'ஏதும் முக்கிய விஷயமா' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை எனக் கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன்.இப்போது பார்த்தால், 'நாங்கள், அ.தி.மு.க.,விடம் பேசி வருகிறோம்' என, சுதீஷ் பேட்டி அளிக்கிறார். இவர்களை நம்பி, எப்படி முடிவெடுப்பது; முதலில், அவர்கள், ஒரு முடிவுக்கு வரட்டும் இவ்வாறு, துரைமுருகன் கலாய்த்து தள்ளினார்.

Tap to resize

Latest Videos

அரசியல் வட்டாரத்தில் அசிங்கப்பட்டு நிற்கு தேமுதிக மீடியா முன்பு என்ன சொல்லலாம் என ஒருநாள் முழுவதும் யோசிச்சு விட்டு அரா அமர செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அதில், தாம் 10 நாட்களுக்கு முன் துரைமுருகனுடன் பேசியதாகவும், நேற்று பேசவில்லை என்றும் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். ஆனால் ஊடகங்களில் தாம் அளித்த பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தாம் நேற்று துரைமுருகனிடம் பேசியதாக கருதப்பட்டுவிட்டது என விளக்கமளித்துள்ளார். ஒரே மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம்.

அது போல ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் பேசக்கூட்டாதா? துரைமுருகனுடனான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காக என்றார்.

click me!