என்னை அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க முன்வந்தார்கள் ஆனால் நான் வேண்டாம் என சொல்லிவிட்டேன் என லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
என்னை அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க முன்வந்தார்கள் ஆனால் நான் வேண்டாம் என சொல்லிவிட்டேன் என லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியதில், அவர்கள் விருப்ப மனுவை கொடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே, இந்தத் தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன.
மேலும் பேசிய அவர், என்னை அதிமுக சின்னத்தில் போட்டியிடச் சொன்னதால் நான் சுயமரியாதையோடு வேண்டாம் என்று சொல்லி சொல்லிவிட்டேன்.
செய்தியாளர்களை பார்த்து, நீ, வா, போ என்று சொல்ல மாட்டேன். நான் சாணக்கியன். அதனால்தான் எதையும் யோசித்து முடிவெடுக்கிறேன், அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது என்பதை நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்.
இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள் ஆனால், எனக்கு அப்படி நிற்பதில் விருப்பமில்லை என்றும் முடியாது எனவும் சொல்லிவிட்டேன். சரி அப்படி வேண்டாம்னா ராஜ்யசபா சீட் தருகிறோம், பிரச்சாரத்திற்கு மட்டுமாவது வாருங்க என்று கேட்டுக்கொண்டார்கள் ஆனால் எனக்கு அதிலும் உடன்பாடு இல்லை என மறுத்துவிட்டேன் எனக் கூறினார் டி.ராஜேந்தர்.