இரண்டு தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நாங்கள் எடுத்த ராஜதந்திர முடிவு குடிபோல ஆந்திரா மற்றும் கேரளாவிலும் நிற்கவுள்ளோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
இரண்டு தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நாங்கள் எடுத்த ராஜதந்திர முடிவு குடிபோல ஆந்திரா மற்றும் கேரளாவிலும் நிற்கவுள்ளோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன. மூன்றவதாக தினகரனின் அமமுக SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி அதனுடன் மட்டும் கூட்டணியை அமைத்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி என்று அறிவித்து வேட்பாளர் நேர்காணலுடன் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது.
தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தினகரனுடன் கூட்டணி அமைப்பார் என சொல்லப்பட்ட நிலையில், திடீரென நேற்று அவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி தமிழக தேர்தல் களம் பிரதாச்சாரத்திற்கு ரீதியாக உள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இன்று தங்களுக்கு ஒதுக்கியுள்ள 2 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதுபோக ஆந்திரா, கேரளாவிலும் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆந்திராவில் 6 தொகுதிகளிலும் கேரளாவில் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விசிக தமிழகத்தில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்ட திருமா, சிதம்பரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், விழுப்புரத்தில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். திமுக இதை வலியுறுத்தியதா? என்று இது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பிய பொழுது, இது முழுக்க முழுக்க எங்கள் கட்சியால், முழுமனதுடன் எடுக்கப்பட்ட முடிவு. இரண்டு தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நாங்கள் எடுத்த ராஜதந்திர முடிவு. இந்த முடிவில் எந்த கட்டாயமுமில்லை, அப்படிப்பார்த்தால் நாங்க தான் எங்க கூட்டணி கட்சியின் சின்னத்தை பயன்படுத்துகிறோம் எனக் கூறினார்.
கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன். வரும் தேர்தலில் எந்த சின்னம் இன்னும் முடிவாகவில்லை. இது சோசியல் மீடியா காலம். அதனால் எந்தச் சின்னம் என்றாலும் சோசியல் மீடியாக்களின் துணையுடன் அதை விரைவில் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.