ஆக்ரோஷமாக அந்தர் பிளானில் இறங்கும் செல்லூர் ராஜு... ஷெடியூல் போட்டு ஒட்டு வேட்டையில் இறங்கும் பிரேமலதா!!

By sathish kFirst Published Mar 24, 2019, 10:22 AM IST
Highlights

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியெல்லாம் அமைத்துவிட்டு, வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தற்போது பிரசாரத்தில் குதித்தனர் தலைவர்கள். கட்சியிலுள்ள கோஷ்டிகள், யார் காலை எப்படி வரலாம், உள்ளடி வேலைகளை செய்து சாய்ப்பது எப்படி என அனைத்திற்கு தயாராகி வருகிறது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியெல்லாம் அமைத்துவிட்டு, வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தற்போது பிரசாரத்தில் குதித்தனர் தலைவர்கள். கட்சியிலுள்ள கோஷ்டிகள், யார் காலை எப்படி வரலாம், உள்ளடி வேலைகளை செய்து சாய்ப்பது எப்படி என அனைத்திற்கு தயாராகி வருகிறது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ஓபிஆர் களமிறங்கி இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடவுள்ளார். மாமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் களத்தில் உள்ளார்.

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பை ஆண்டிபட்டி தங்கத்திடம் கொடுத்தனுப்பியதை மறந்து போன, செல்லூரார் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது,ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்த இளங்கோவன் வெற்றி பெற முடியாது, டெப்பாசிட் காலியாகிவிடும் என்றார். தேனி அதிமுக வேட்பாளர் ஓபிஆர் படபடப்பாகவே, ''தேனி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இளங்கோவன் அவர் தொகுதியில் போட்டியிடாமல், தேனியில் நிற்கிறார். முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இளங்கோவன் வந்ததும் இல்லை, குரல் கொடுத்ததும் இல்லை பேதியிலேயே பேசினார்.

அடுத்ததாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, 21 நாட்கள், தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேமுதிக நான்கு  தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ளதால், அவரால், தீவிர 
பிரசாரம் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. அவருக்கு பதிலாக, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரேமலதா பிரசாரம் செய்ய உள்ளார். தனது பிரச்சாரத்தை கன்னியாகுமரியில் ஆரம்பித்து, கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தை முடிக்க, அவர் திட்டமிட்டு இருந்தார். தற்போது, திருப்பூரில், வரும், 27ல் அவர் பிரசாரம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 16ல், பிரசாரத்தை நிறைவு செய்கிறார். 

தொடர்ந்து 21 நாட்கள் நடக்கும் பிரசாரத்தில் கேப்டன் வந்தால் எப்படி கூட்டம் வருமோ அதை மிஞ்சும் அளவிற்கு கூட்டத்தைக் கூட்ட தேமுதிகவினருக்கு கட்டளை போட்டிருக்கிறாராம்.

click me!