இந்த இரண்டு தொகுதிகளில் புகுந்து விளையாடப்போகும் 20 ருபீஸ் டோக்கன்! அலசியதில் கிடைத்த ஷாக் ரிப்போர்ட்...

By sathish k  |  First Published Mar 23, 2019, 6:12 PM IST

 இடைத்தேர்தலுக்கு புது பார்முலா கிரியேட் பண்ண ஆர்.கே.நகர் தொகுதியைப்போல 20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை இந்த இரண்டு தொகுதிகளிலும்  இம்ப்ளீமென்ட் பண்ண டிபார்ட்மென்ட்டை ரெடியாக வைத்துள்ளாராம். 


முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் சேலம் தொகுதியும், ஓபிஎஸ் மகன் நிற்கும் தேனி தொகுதி வெற்றி ஆளும் கட்சிக்கு கௌரவப் பிரச்சனையாக உள்ளது. சேலத்தில் 2009, 2014 தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறது ஆளும் தரப்பு. அதே மாதிரி தான் தேனியும்.

சேலம் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமுதாயத்தவரே மெஜாரிட்டியாக இருப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். எஸ்.சரவணனை களம் இறக்கியிருக்கும் எடப்பாடி, கரன்சி விளையாடுவதில் பஞ்சம் இருக்காது என்பதால் ரத்தத்தின் ரத்தங்கள் சொந்த வேலைகளை ரத்து செய்துவிட்டு கட்சி வேட்டியை கட்டிக்கொண்டு ஒட்டுக்கேட்க கிளம்பிவிடுவார்கள்.

Tap to resize

Latest Videos

 திமுக வேட்பாளராக களம் இறங்குகிறார் அதே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன். அதேபோல, அமமுக சார்பில் போட்டியிடப்போவதும் எஸ்கே.செல்வமும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளும் கட்சியின் எதிர்க்கட்சியான அமமுக என மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அனலைஸ் ரிப்போர்ட் அனலைக் கிளப்பியிருக்கிறது. 

அமமுகவின்  செல்வம்தான்  எடப்பாடிக்கு ரொம்பவே உறுத்தலாக இருப்பவர். ஆளும் கட்சி அளவுக்கு இல்லையென்றாலும் எவ்வளவேனாலும் சமாளிக்கும் பணபலத்துடன் இருக்கிறார் செல்வம். கடந்த ஒரு வருஷமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, பூத் ஏஜெண்டுகள் நியமனம் என  தொகுதி முழுவதும் களப்பணிகளில் இறங்கியிருக்கிறார். 

இதேபோல தேனியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்க மிக வலிமையான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை தினகரன் களமிறக்கி இருக்கிறார் என்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டார்கெட் என்னன்னா? திமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஓபிஎஸ் மகன் ஜெயிக்கக்கூடாது என்பது தான் ஒன லைன் அஜெண்டா.

சேலத்தில் செல்வமும், தேனியில் தங்க தமிழ் செல்வனும் தான் ஜெயிக்கணும் எனபதைத் தாண்டி, ஆளும் கட்சி வேட்பாளரின் படு தோல்வியைத்தான் பெரிதும் பார்க்கிறார்கள் தினகரனும் அவரது தளபதிகளும். இதற்காக இடைத்தேர்தலுக்கு புது பார்முலா கிரியேட் பண்ண ஆர்.கே.நகர் தொகுதியைப்போல 20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை இந்த இரண்டு தொகுதிகளிலும்  இம்ப்ளீமென்ட் பண்ண டிபார்ட்மென்ட்டை ரெடியாக வைத்துள்ளாராம். 

click me!