எஸ்.ஆர்.பார்த்திபனை ஒன்று கூடி ஜெயிக்கவைக்கும் பாமக, தேமுதிக, அமமுக!! அதிரவைக்கும் அசத்தல் ரிப்போர்ட்

By sathish k  |  First Published Mar 23, 2019, 2:27 PM IST

அதிமுகவை தேமுதிக, பாமக, அமமுக என மூன்று கட்சிகளும் மூன்று பக்கமும் தோற்கடிக்க பல வியூகங்கள் அமைத்து களப்பணி ஆற்றும் நிலையில் திமுக அசாட்டாக வெற்றிபெறும் என தெரிகிறது.


அதிமுகவை தேமுதிக, பாமக, அமமுக என மூன்று கட்சிகளும் மூன்று பக்கமும் தோற்கடிக்க பல வியூகங்கள் அமைத்து களப்பணி ஆற்றும் நிலையில் திமுக அசாட்டாக வெற்றிபெறும் என தெரிகிறது.

சேலம் தொகுதியில் தாமரைக் கண்ணனுக்காக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன். அதேபோல, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டிராஜா தரப்போ, மறைந்த தனது அண்ணன் செழியனின் மருமகன் தருணுக்கோ இல்ல சென்னையில் உள்ள தம்பி பிரபுவுக்கோ சீட் வாங்கிவிட, கனிமொழி மூலமாக காய் நகர்த்தி வந்துள்ளனர். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், எஸ்.ஆர்.பார்த்திபனை வேட்பாளராக அறிவித்துவிட்டார் ஸ்டாலின்.  எஸ்.ஆர்.பார்த்திபனை அறிவித்தது திமுக தொண்டர்களுக்கு முழு திருப்தி தான். 

Tap to resize

Latest Videos

ஆமாம், நாமக்கல் எம்.பி.தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போது, அத்தொகுதியின் சின்னச்சின்ன கிராமங்கள்தோறும் கூட்டங்களை நடத்தி, ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்று  சீட்டையும் வாங்கிவிட்டார் பார்த்திபன். 

தினகரன் பிரிக்கும் அதிமுக ஓட்டுக்கள் திமுகவுக்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. ஆனால் திமுக மசெக்கள் கோஷ்டியால் பிரிந்துள்ளதால்  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில்  ஓட்டு சிதறிவிடும். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் டிஎம்.செல்வகணபதியை தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமித்து விட்டார் ஸ்டாலின்.

வெற்றி வாய்ப்பு?  திமுக வேட்பாளர் ஏற்கனவே  தேமுதிகவில் முக்கிய புள்ளி என்பதால் அந்த பகுதியில் உள்ள சின்ன சின்ன கிராமங்களில் உள்ள தேமுதிக கிளைகளில் நல்ல பெயர், ஒன்றிய செயலாளர்களிடம் டச்சில் உள்ளது என ஒவ்வொரு பகுதிகளிலும் தேமுதிக வாக்குகள் பல்க்காக அப்படியே பார்த்திபனுக்கு கிடைக்கும் என சொல்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தேமுதிக எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், பிஜேபிவின் அழுத்தத்தால்தான் தங்களுக்கு இந்தத் தொகுதி கிடைக்கவில்லை என்ற கடுப்பில் இருக்கிறது தேமுதிக தலைமை. அதனால் அந்தக் கட்சியின் தொண்டர்கள் சைலண்ட்டாக பார்த்திபனுக்காக திண்ணைப் பிரச்சாரத்தில் உள்ளார்களாம். 

அதேபோல கடந்த 2009 தேர்தலின் போது அதிமுகவின் உள்ளடி வேலைகளால்தான் அனைத்துத் தொகுதியிலும் பாமக படு தோல்வியை சந்தித்தால் பாமக கோலா காண்டில் உள்ளதாம்.  பழைய பகை மனசில் இருப்பதால் பழிதீர்க்கும் என சொல்லப்படுகிறது.

கடைசியாக ஆயுதத்தோடு காத்திருக்கும் தினகரன்;

சொந்த மண்ணில் எடப்பாடியை வீழ்த்தும் முனைப்பில் தினகரன் இருப்பதால், எடப்பாடி செய்யும் செலவைவிட டபுளாக செய்யும் முயற்சியில் ஆட்களை இறக்கியிருக்கிறாராம், கடைசி தேர்தலில் ஒன்றியம், கிளை வாரியாக அதிமுக வாக்கு வாங்கிய லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு கரன்சியை கட்டுக்கட்டாக இறக்க காத்துக்கொண்டிருக்கிறது அமமுக. இப்படி தேமுதிக, பாமக, அமமுக என மூன்று கட்சிகளும் மூன்று பக்கமும் பல வியூகங்கள் அமைத்து களப்பணி ஆற்றும் நிலையில் திமுக அசாட்டாக வெற்றிபெறும் என தெரிகிறது.

click me!