நான் அப்படிதாண்டா பண்ணுவேன்... வெளியே போடா!! தொண்டனை மானாவாரியா திட்டிய சீமான் ஆடியோ!!

By sathish kFirst Published Mar 19, 2019, 5:05 PM IST
Highlights

நாங்க அப்படிதாண்டா செய்வோம்,  நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடுஞ்சா செய். இல்லைனா வெளியேறி போய்ட்டே இரு. கேள்வி கேப்பேன், கேள்வி கேப்பேனு நக்கல் பண்ணிட்டு திரியிறியா? என தொண்டனிடம் சீமான் எகிறி ஆடியோ வைரலாகி வருகிறது.

நாங்க அப்படிதாண்டா செய்வோம்,  நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடுஞ்சா செய். இல்லைனா வெளியேறி போய்ட்டே இரு. கேள்வி கேப்பேன், கேள்வி கேப்பேனு நக்கல் பண்ணிட்டு திரியிறியா? என தொண்டனிடம் சீமான் எகிறி ஆடியோ வைரலாகி வருகிறது.

தொண்டன்; அண்ணே வணக்கம்ணே!!
 
சீமான்;  நீ என்ன சீட்டு அவருக்குதான் கொடுக்கணும், இவருக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறியாமே? 

தொண்டன்; அண்ணே என்ன அண்ணே? 

சீமான்; சீட்டு இந்திராங்குற பொண்ணுக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறுயாமே நீ?

தொண்டன்; அண்ணே இந்திரா அக்காவுக்கு கொடுக்கணும்னு சட்டம்லாம் போடலணே, தொகுதில வேலை பார்க்குறவங்களுக்கு, களத்தில இருக்குறவங்களுக்கு...

சீமான்; ஏன் அதெல்லாம் எனக்கு தெரியாதா, வேலை பார்க்குறவங்க, களத்துல இருக்குறவங்களையெல்லாம் உனக்கு தெரியும், எனக்கு தெரியாதா?
 
தொண்டன்; நம்ம களத்துல இருக்குறவங்க யாருக்காவது கொடுங்கணுதான் சொல்றோம். 

சீமான்; ஏன் எங்களுக்கு தெரியாதா யார நிப்பாட்டணும்னு, நாங்களாம் என்ன முட்டாப்பயலுக என்னடா, நீங்க களத்துல இருக்குறவங்களை கண்டுபிடிச்சு எங்களுக்கு காட்டிருவிங்க?

தொண்டன்; அண்ணே இங்க நடக்குறத சொல்றோம் அவ்வளவு தான்.

சீமான்; என்ன நடக்குது, என்ன நடக்குதுனு சொல்லு, எங்களுக்கு தெரியாதது உனக்கு தெரியுதா?

தொண்டன்; களத்துல இருக்குறவங்களுக்கு வேலை கொடுத்தா நாங்க கூட இருந்து வேலை பாக்குறோம். களத்துல இருக்குறவங்க யாராக இருந்தாலும் சரி.  அது இந்திரா அக்கானு கிடையாது. களத்துல நிக்குறவங்க யார வேணும்னாலும் சொல்லுங்க, அவங்களுக்கு கீழ நாங்க வேலை பார்க்கிறோம். 

சீமான்; தம்பி நான் நிறுத்துற ஆளுக்குவேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு. நீ என்ன, களத்துல நிக்குறவங்களுக்கு கொடுங்கணு, நீ என்னடா எனக்கு விதி விதிக்குற.

தொண்டன்; என்ன அண்ணே நீங்களே இப்படி பேசலாமா??
 
சீமான்; நான்தான்டா பேசுவேன், நான்தான் பேசுவேன். என்ன நீங்கனா. நீ சொல்றதுக்குதான் நான் இங்க நிற்கிறேனா?
 
தொண்டன்; களத்துல வேலை பார்க்குறவங்களுக்கு மதிப்பு கிடையாது, கடைசி வரைக்கும் நாங்க சுவரொட்டி ஒட்டிட்டே இருக்கணும் தானே...

சீமான்; நீ ஒட்ட வேணாம் போடா, போடா நீ, ஒட்டவேணா டா போடா, எனக்கு போஸ்டர் ஒட்டிக்கத் தெரியும் போடா.

தொண்டன்; நம்ம கட்சிணே வேற யாருணே சொல்றது. 
 
சீமான்; அப்போ வாயை மூடிட்டு இரு. எனக்குத் தெரியும், சொல்றத செய். முடியலைனா வெளிய போயிட்டே இரு.

தொண்டன்; அப்படியெல்லாம் போயிற முடியாதுணே. களத்துல நின்னு நாம வேலை செய்றோம். நாங்க கேள்வி கேட்கத்தான் செய்வோம். நீங்க அதற்கு தகுந்த மாதிரி ஆளப்போடுங்க அவ்வளவுதான். 
 
சீமான்; முடியாது போட என்னடா செய்வ இப்ப? நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடுஞ்சா செய். இல்லைனா வெளியேறி போய்ட்டே இரு. கேள்வி கேப்பேன், கேள்வி கேப்பேனு நக்கல் பண்ணிட்டு திரியிறியா?
 
தொண்டன்; அடிப்படை உறுப்பினர், வேலை செய்றவன் கேள்வி கேட்கக்கூடாதா, வேற என்னணே தப்பா கேட்டுட்டேன். 

சீமான்; நீ எனக்கு வேட்பாளர் தேர்வு பண்ணித்தர என்னடா

தொண்டன்; வேட்பாளர் தேர்வுலாம் பண்ணித்தரல, தொகுதில நிக்குறவங்க...

சீமான்; தம்பி நீ இவ்வளவு எல்லாம் பேசாத, இவ்வளவுலாம் பேசாத நீ..

இப்படி நடந்த இந்த ஆடியோ உரையாடல் சமுக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அதை எதிர்த்து பேசி வருகின்றனர்.  இந்த ஆடியோ உண்மாயா பொய்யா என்பது தெரியவில்லை, குறித்து கட்சியிலிருந்து எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!