தினகரனின் வாக்கு வங்கியை காலி பண்ண ஓபிஎஸ் எடப்பாடி போட்ட சூப்பர் பிளான்!! அதிமுகவில் யாருமே செய்யாத சூழ்ச்சி...

By sathish kFirst Published Mar 19, 2019, 1:20 PM IST
Highlights

அதிமுக வாக்குவங்கியை அப்படியே பாதியாக பிரித்து வைத்திருக்கும் தினகரனுக்கு, விழும் வாக்கு வங்கியையும், அவரது சமூகத்தை சேர்ந்த வாக்குகளையும் அவரது சமூகத்தைச் சேர்ந்த கார்த்தியை வைத்தே  காலி பண்ண, அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண வைக்கவுள்ளார்களாம் எடப்பாடியும் பன்னீரும் .

அதிமுக வாக்குவங்கியை அப்படியே பாதியாக பிரித்து வைத்திருக்கும் தினகரனுக்கு, விழும் வாக்கு வங்கியையும், அவரது சமூகத்தை சேர்ந்த வாக்குகளையும் அவரது சமூகத்தைச் சேர்ந்த கார்த்தியை வைத்தே  காலி பண்ண, அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண வைக்கவுள்ளார்களாம் எடப்பாடியும் பன்னீரும் .

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக. தலைமை அலுவலகத்தில் நடிகர் கார்த்திக் சந்தித்துப் பேசினார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு குறையும் மக்களுக்கு ஏற்படாத வகையில் இருப்பதாகவும், அதைப் படித்துப் பார்த்தால் புரியும் என்றும் கூறினார்.மேலும் நான் அதிமுகவில் இணைந்துவிட்டேன் என்றும் வைத்துக்கொள்ளலாம், ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.

அதிமுக ஒரு காலத்தில் முக்குலத்தோர் கட்சி என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. அந்த அளவிற்கு அந்த கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி வைத்திருந்தார் சசிகலா, கட்சியில் பெரும்பாலும் குடும்பத்தின் செல்வாக்கு இருந்து வந்தது. இப்போது சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இல்லாத நிலையில் தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பாலும் தினகரனுக்கே போகும் சூழல் இருக்கிறது. 

இதை அறிந்துகொண்ட எடப்பாடியும், பன்னீரும் முக்குலத்தோர் முத்திரை குத்தப்பட்ட எந்த பிரபலத்தின் ஆதரவையும் இழக்கத் தயாராக இல்லை, அதிமுக வாக்கு வங்கியை பிரித்து வைத்திருக்கும்  தினகரனுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை காலத்தில் இறக்கிவிட முடிவு செய்துள்ளார்களாம்,  இதன் முதற்கட்டமாக  கார்த்திக்  அதிமுக அணிக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.

click me!