திமுக கூட்டணிக்கே 34 தொகுதிகள்... வெளியானது மெகா கருத்துக்கணிப்பு முடிவு!!

By sathish kFirst Published Mar 19, 2019, 11:58 AM IST
Highlights

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக  கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும், பிஜேபி வெறும்  என்று டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக  கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும், பிஜேபி வெறும்  என்று டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஓரணியிலும் நிற்கின்றன.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவரும் நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று, டைம்ஸ் நவ் மற்றும் VMR  நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 

இதில், பாஜக தலைமையிலான அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்பது இந்த கருத்துக் கணிப்பின் முடிவாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது 

தமிழகத்தில், 39 மக்களவைத் தொகுதிகளில் 34 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணியும், அதிமுக - பிஜேபி கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

திமுக - காங்கிரஸ் கூட்டணி மெகா வெற்றியை பெரும் என்றும் சுமார் 52.20 சதவிகிதம் வாக்குகளை வாங்கும் என கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறது.

அதிமுக பிஜேபி கூட்டணியைப் பொறுத்தவரை 37.2 சதவிகிதம் வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.6 சதவிகிதம் வாக்குகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!