நாங்க கூட சொல்லல ஆனா அதிமுக சொல்லிட்டாங்க... வாய் வலிக்க புகழும் ராமதாஸ்!!

By sathish k  |  First Published Mar 23, 2019, 10:32 AM IST

கடலூரில் வேட்பாளர்கள் அறிமுகக்  கூட்டத்தில் பேசிய ராமதாஸ் அதிமுகவை புகழ்ந்து பேசியுள்ளார்.


அதிமுக கூட்டணியில் 7 சீட் வாங்கியுள்ள பாமக கடலூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளது. கடலூர் வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய ராமதாஸ், எதிர்க்கட்சியின் வேட்பாளர் டெப்பாசிட்  பறிபோக வைக்கும் அளவிற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனப் பேசினார். 

ஜெயலலிதாவைப் பற்றியும் அதிமுகவைப் பற்றியும் வாய் வலிக்க புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், அதிமுக என்றதும் சத்துணவு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவை தான் நினைவுக்கு வரும். 69 சதவீத இடஒதுக்கீட்டினை 9 ஆவது அட்டவணையில் சேர்த்த பெருமை அம்மையார் ஜெயலலிதாவையே சாரும். அதனால்தான் அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டம்  வழங்கப்பட்டது என புகழ்ந்தார்.

Tap to resize

Latest Videos


 
பொங்கல் பண்டிக்கைக்கு ரூ.1,000, ஏழைக்குடும்பத்திற்கு ரூ.2,000 என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதனால்தான் மக்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகி 40 மக்களவைத் தொகுதியிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும் என மானாவாரியா புகழ்ந்து தள்ளினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாமக தேர்தல் அறிக்கையில்கூட இல்லாத வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள உச்சநீதிமன்ற கிளையினை சென்னையில் உருவாக்க முயற்சி செய்வோம் என்று கூறி இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என செய்தியாளர்கள் சந்திப்பிலும் அதிமுகவை விடாமல் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

click me!