8 வருஷமா அதிமுக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறது... மானாவாரியா புகழ்ந்து தள்ளும் ராமதாஸ்!!

By sathish kFirst Published Mar 20, 2019, 8:04 PM IST
Highlights

கடந்த 8 வருஷமா அதிமுக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவை மானாவாரியாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதிமுக - பிஜேபி கூட்டணியில் ஏழு தொகுதிகளை வாங்கியுள்ள பாமக தொழுதிகளில், விழுப்புரமும் ஒன்று, வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், விழுப்புரத்தில் போட்டியிடுகின்ற போட்டியிடுகிற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் மற்றும் தேமுதிக சார்பில் போட்டியிடும்  கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஸும் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசிய ராமதாஸ், “திமுக ஆட்சிக் காலத்தில்தான் மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. கச்சத்தீவை திமுக ஆட்சியில்தான் இழந்தோம். காவிரி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காததற்குக் காரணம் திமுக. திமுக இப்போது ஆட்டம் கண்டிருக்கிறது. நாம் அவர்களோடு சேரவில்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  நாம்  சேர வேண்டிய இடத்திலே சேர்ந்திருக்கிறோம். கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக சர்வ சாதாரணமாக வெற்றி பெற்றார்கள். பாமக ஒரு தொகுதியிலும், பிஜேபி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

திமுக பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்டார்கள், இப்போதும் சொல்கிறார்கள், இனியும் சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக சிறப்பான ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. மக்களிடம் எந்தவிதமான சிறு எதிர்ப்போ, சலசலப்போ இல்லை என்று நிச்சயமாக நான் சொல்வேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், தமிழகத்தில் நடக்கும் 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத் தேர்தலிலும் இக்கூட்டணி வெற்றிபெறும் என்றார்.

மேலும் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் கருத்துக்கணிப்புகள் அப்படித்தான் சொல்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூரில் நடக்கும் கூட்டத்தில் நான் பங்கெடுத்து சுதீஸை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். சுதீஷ் நிச்சயமாக வெற்றி பெறுவார். வடிவேல் ராவணனைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எல்லா கிராமங்களுக்கும் வந்து உங்களைச் சந்தித்தவர், மிகவும் எளிமையான மனிதர்.  திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி கட்சியின்  சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் இது வேடிக்கையாக உள்ளது என்றார். 

click me!