திமுக, அதிமுக என இரு மாபெரும் கட்சிகள் ஒன்றில் கூட ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் நிறுத்தாததால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியிருக்கிறார்.
திமுக, அதிமுக என இரு மாபெரும் கட்சிகள் ஒன்றில் கூட ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் நிறுத்தாததால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா, கருணாநிதி இப்படியான சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்ததே இல்லை, திமுக, அதிமுக என இரு மாபெரும் கட்சிகள் ஆளுக்கு 20, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் இந்த ஒன்றில் கூட ஒரு முஸ்லீம்க்கு கூட வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில தினங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
பிஜேபியில் கூட இப்பொபடி செய்திருந்தாலும், யாரும் அதைக் கேட்கப்போவதே இல்லை, ஆனால் திமுக, அதிமுக இப்படி செய்யலாமா? என்பதுதான் கேள்வி! இந்த விஷயத்தைப் பற்றி இரண்டு கட்சிகளும் தெரிந்து தான் செய்துள்ளார்களாம் என்பதை யோசித்து தான் ஆகணும், ஆமாம், தற்போது உள்ள சூழலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியை நேரடியாகவே சந்திக்கப்போகிறது இரண்டு திராவிடக்கட்சிகளும்.
இப்படி ஒரு பிரச்சனை சைலண்ட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இஸ்லாமிய மக்களை வெறுப்பேத்தும் விதமாக, ஒரு போஸ்டரை வேலை மெனக்கெட்டு அச்சிட்டு ஒட்டியுள்ளது இந்து மக்கள் கட்சி.
அந்த போஸ்டரில், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோவிப் போட்டு, இந்து மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று ஒரு முஸ்லிம் வேட்பாளர்களை கூட களமிறக்காத திரு.மு.க.ஸ்டாலின், திரு.பழனிச்சாமி ஆகியோருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்! பாரத பணியில் ஒன்றிணைந்து பயணிப்போம்! இந்து மக்கள் கட்சி - தமிழகம்" என்று அந்த போஸ்டரில் உள்ளது. கீழே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போட்டோ போட்டுள்ளனர்.
ஸ்டாலினுக்கும், முதல்வருக்கும் நன்றி சொல்லி அடிக்கப்பட்ட போஸ்டரில் எவ்வளவு வக்கிரங்கள் இருக்கிறது என்பது தெரளிவாகவே தெரிகிறது. அப்படியானால் அர்ஜூன் சம்பத், ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இருக்கக்கூடாது என்று இருவரிடமும் வேண்டுகோள் வைத்தாரா? அதனை ஏற்றுதான் இஸ்லாமியர்கள் இல்லாத வேட்பாளர் பட்டியலை அதிமுக திமுக கட்சிகளும் வெளியிட்டதா என்ற யோசிக்கக் கூட முடியாத கேள்வி எழுகிறது .
இந்த போஸ்டருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என மறுப்பு சொல்லவில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பும், கண்டனமும் எழுத தொடங்கியுள்ளது.