போட்டுக் கொடுத்த ராஜன் செல்லப்பா, கடுப்பான எடப்பாடியார், ரூட்டை மாற்றிய செல்லூர்ராஜு

By sathish kFirst Published Mar 25, 2019, 7:32 PM IST
Highlights

மதுரையின் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனின் அறிமுக விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ ’பணம் கொடுத்ததால் ஜெயிக்கப்போகிறோம்!’ எனும் தொனியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்பதை நமது இணையதளத்தில் விரிவாக எழுதியிருந்தோம்.

மதுரையின் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனின் அறிமுக விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ ’பணம் கொடுத்ததால் ஜெயிக்கப்போகிறோம்!’ எனும் தொனியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்பதை நமது இணையதளத்தில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த செய்தியை பார்த்துவிட்டு மதுரை மாவட்ட தி.மு.க.வினர் ‘அமைச்சரே ஒத்துக்கிறாரு பாருங்க ஓட்டுக்கு பணம் கொடுக்குறதை!’ என்று சீன் போட்டு கியரை ஏற்றினர். அமைச்சரின் பேச்சினால் எங்கே தன் மகனின் வெற்றி பாதிக்கப்படுமோ? என்று பயந்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இது பற்றி முதல்வர் இ.பி.எஸ்.ஸிடமே புகார் தெரிவித்து ‘அவரை கொஞ்சம் அடக்கமா பேசச்சொல்லுங்க தலைவரே!’ என்று பம்மினார்.

ஏற்கனவே பலவித டென்ஷனில் இருந்த எடப்பாடியார், செல்லூராரிடம் “தென்மண்டலத்துல தொடந்து அமைச்சர்கள் இப்படி சர்ச்சையாவே பேசிட்டிருக்கிறதா தகவல் வருது. அதுலேயும் நீங்க பேசுன பேச்சு தேர்தலுக்கே சிக்கல் வர்ற மாதிரி இருக்குதுன்னு சொல்றாங்க. கொஞ்சம் பார்த்து பேசுங்க. இல்லேன்னா ஆட்சியை தூக்கி அறிவாலயம் கையில கொடுத்துட்டு, நாம பொட்டியை கட்டுற நிலையை மக்கள் கொண்டாந்துவிட்டுடுவாங்க.” என்று சீறிவிட்டாராம். உடனே சிரித்து மழுப்பிய செல்லூரார், அதன் பிறகு தனது பிரசார ஸ்டைலையே மாற்றிவிட்டார். எங்காவது நிருபர்கள் எடக்கு மடக்காக கேள்வி கேட்டாலும் கூட மனிதர் வாயை திறப்பதேயில்லை. சமீபத்தில் “பொண்ணு பார்க்க போற இடத்துல ‘இன்னார்தான் மாப்பிள்ளை’ன்னு பையன காட்டணுமுங்க. ஆனா யாரு மாப்பிள்ளைன்னே சொல்லாம பொண்ண பார்க்கப் போற மாதிரி, தி.மு.க. கூட்டணியில யார் பிரதமர் வேட்பாளர்ன்னு சொல்லாமலே கொண்டு போயிட்டு இருக்காய்ங்க.

இவிய்ங்களையெல்லாம் நம்பி எவன் ஓட்டு போடுவாம்! நீங்களே நியாயத்த சொல்லுங்கய்யா” என்று எடுத்துவிட, கூட்டம் ஏகத்துக்கும் ரசித்திருக்கிறது. செல்லூரார் தன் நடையை மாற்றியதில் ராஜன் செல்லப்பாவுக்குதான் ஏக சந்தோஷம். ‘அப்பாடா மனுஷன் ஒருவழியா ஃபார்முக்கு வந்துட்டாரு!’ என்று குஷியாகியிருக்கிறார். செல்லப்பா சார் அப்டியெல்லாம் குஷியாகிடாதீங்க. இது வெயில் நேரம், நம்ம தலைவரு அணை பக்கமா போனாக்க டோட்டலா டிரெண்டு சேஞ்ச் ஆகிடும் பார்த்துங்க.

click me!