இப்படி தாராள உள்ளம் கொண்ட இந்த மனுஷனை கலாய்ச்சிட்டோமே என திண்டுக்கல் சீனிவாசனை நினைத்து நெட்டிசன்கள் குமுறிக் குமுறிக் அழுகின்றனர்.
இப்படி தாராள உள்ளம் கொண்ட இந்த மனுஷனை கலாய்ச்சிட்டோமே என திண்டுக்கல் சீனிவாசனை நினைத்து நெட்டிசன்கள் குமுறிக் குமுறிக் அழுகின்றனர்.
அதிமுக கோட்டையாக இருக்கும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக, பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களமிறங்கியிருக்கிறார்.
அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்நாள் அமைச்சர் சீனிவாசனின் கொத்தடி மோதலால் பாமகவுக்கு தள்ளிவிட்டுள்ளனர் ஓபிஎஸ் இபிஎஸ், இதனால் அதிமுகவில் உள்ள நத்தம் ஆட்கள் சரிவர தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
ஆனால், கட்சியில் முக்கிய பதவியில் இருப்பதால் பாமக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஜோதிமுத்துவை ஆஃப்பியே விட்டுவிடவும் முடியாது. கூட்டணி தர்மத்திற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஊழியர் கூட்டங்களை போட்டு கட்சிக்காரர்களையும் கூட்டணிக் கட்சியினரையும் தேர்தல் களத்தில் இறக்கி இருக்கிறார்.
இதுவரை தேர்தல் செலவுக்கு தலைமையிலிருந்து இதுவரை பணம் வராததால் அனைத்து செலவுகளையும் அமைச்சர் சீனிவாசனே பார்த்து வருகிறார்.
பாமக வேட்பாளரான ஜோதிமுத்து எப்போதுமே கட்சியின் கலரான மஞ்சள் கலர் அரைக்கை சட்டை அணிவது தான் வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக தெரிதல் பிரச்சாரத்திலும் அதே போல கலர் சட்டை அணிந்தே சென்றுள்ளார். இதைப் பார்த்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசியலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது வாக்காளர்களை கவர இது சரிப்பட்டுவராது என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார் அமைச்சர் சீனிவாசன்.
அதோடு நிற்காமல் தானே திண்டுக்கல் கடை வீதியில் உள்ள ராம்ராஜ் துணிக் கடைக்கு ஆள் அனுப்பி 20 வெள்ளை முழுக்கை சட்டைகளை உரிமையோடு எடுத்துக் கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறார். பாமக வேட்பாளர் ஜோதிமுத்து வெள்ளை முழுக்கை சட்டையுடன் தான் தற்போது தேர்தல் களத்தில் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வருகிறார். இப்படி தாராள உள்ளம் கொண்ட இந்த மனுஷனை கலாய்ச்சிட்டோமே என திண்டுக்கல் சீனிவாசனை நினைத்து நெட்டிசன்கள் குமுறிக் குமுறிக் அழுகின்றனர்.