5 தொகுதியில் ராமதாஸ் குடும்பத்தினர்... வெறும் 2 மட்டுமே கட்சிக்கு, அதிர்ச்சியில் நிர்வாகிகள்...

By sathish k  |  First Published Mar 9, 2019, 7:14 PM IST

7 தொகுதிகளை அதிமுகவிடம் வாங்கிய பாமக, தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர், அதாவது அதிமுக பிஜேபி கூட்டணியில் வாங்கிய  7 தொகுதியில் 5 அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் இடம் தரமாட்டார்கள் போல என புலம்பி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

பிஜேபி அதிமுக கூட்டணியில் பிஜேபியை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தொகுதிகளையும் வாங்கிய பாமக குஷியில் விருந்து வைத்து அசத்தியது. இந்த ஒப்பந்தத்தால் கூட்டணிக்கு வருவதாக இருந்த விஜயகாந்த்தின் தேமுதிக உதகட்ட கடுப்பாகி பல இன்னல்களை சந்தித்து வருகிறது.

தேமுதிகவை எதிர்பார்த்து பாஜக இருப்பதால் அதிமுகவினால் கூட்டணியை இறுதிசெய்ய முடியவில்லை. ஆனால் எழுத்தொகுதிகள் எது என தற்போது தெளிவாகியிருக்கிறது. அதில், கடைசிமுறை  பாமகவின் வென்ற தொகுதியான தர்மபுரியில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். 

அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஏகே மூர்த்திக்கு கிடைக்கும் என சொல்லப்பட்ட நிலையில், அங்கு  ராமதாஸின் நெருங்கிய உறவினரான வேலுவையும், மற்றொரு உறவினரான தன்ராஜை கள்ளக்குறிச்சியில் நிறுத்தவும் பிளான் போட்டுள்ளார்களாம், மத்திய சென்னையில் மற்றொரு உறவினரை நிறுத்தவும், விழுப்புரம் தனித்தொகுதியில் வடிவேல் ராவணனை நிறுத்தவும், ஆரணியில் அன்புமணி ராமதாஸ் நிற்கவைக்க  முடிவு செய்துள்ளனர்.

தன்னைத்தவிர தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள், அப்படி வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் கூறினார். ஆனால் கடந்த சில வருடங்களில் செய்த காரியங்களால் அதிர்ச்சியில் இருந்த முன்னணி நிர்வாகிகள் செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.

click me!