திமுகவுக்கு டெப்பாசிட் போகும் அளவிற்கு செலவு பண்ணுங்க! பாமகவிலிருந்து வந்த அதிரடி ஆர்டர்...

By sathish kFirst Published Apr 12, 2019, 11:40 AM IST
Highlights

திமுக தனது டெப்பாசிட்டை இழக்கும் அளவுக்கு, தாராளமாக செலவு செய்யுமாறும் தேர்தல் முடிந்ததும், அந்த நிதியை வழங்குவதாகவும், வேட்பாளர்களிடம், பாமக  தலைமை உறுதி அளித்துள்ளது.

திமுக தனது டெப்பாசிட்டை இழக்கும் அளவுக்கு, தாராளமாக செலவு செய்யுமாறும் தேர்தல் முடிந்ததும், அந்த நிதியை வழங்குவதாகவும், வேட்பாளர்களிடம், பாமக  தலைமை உறுதி அளித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், தர்மபுரி, கடலுார், விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய ஏழு தொகுதிகளை வாங்கியுள்ளது பாமக. விழுப்புரத்தில், விசிக வேட்பாளர் ரவிகுமார், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். இதனால், ஏழு தொகுதிகளிலும், பாமக திமுகவை எதிர்த்து  போட்டியிடுகிறது.

திமுகவோடு கூட்டணிக்கு வராத பாமகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என, கட்சியினருக்கு, திமுக தலைவர், ஸ்டாலின் பக்க ஸ்கெட்ச் போட்டுள்ளார்.  இதனால், திமுக வேட்பாளர்கள், பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். அதற்கு இணையாக சார்பில்  தர்மபுரியில் போட்டியிடும் அன்புமணி தாறுமாறாக செலவு செய்து வருகிறார், அதேபோல மத்திய சென்னையில் போட்டியிடும் சாம் பால் எதிர்த்துப் போட்டியிடும் தயாநிதி மாறனைப் போலவே தாராளமாக செலவு செய்வதால் பிரசாரத்தில் அதிமுக தொண்டர்கள், பாமக தொண்டர்கள் என கூட்டம் களைகட்டுகிறது. ஆனால் மற்ற வேட்பாளர்களிடம், திமுக வேட்பாளர்களுக்கு இணையாக பணம் இல்லாதததால், அவர்கள், செலவில் சிக்கனம் காட்டுகின்றனர். 

அவர்களுக்காக,அதிமுக அமைச்சர்களும் செலவு செய்வதில்லை. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செலவுக்கு பணம் தரும்படி, கட்சி தலைமையிடம், பாமக வேட்பாளர்கள் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து, கட்சி வட்டாரத்தில்; அன்புமணிக்கு மட்டும் கட்சி தலைமை செலவு செய்கிறது. ஆனால், மற்ற வேட்பாளர்கள், தற்போது வரை சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். அதில், தொழிலதிபர் சாம் பால் வசதியானவர், மற்ற வேட்பாளர்களால் திமுக, வேட்பாளர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியவில்லை. இதனால், அவர்கள் கேட்ட தொகையை தர இருக்கிறதாம் பாமக. உங்களை எதிர்த்து, பண முதலைகள் போட்டியிடுவது தெரியும் நமக்கு, மெகா கூட்டணி பலம் உள்ளதால் திமுகவை வீழ்த்த எந்த சிரமம் இருக்காது. என்பதால் சொந்த பணத்தை வெற்றிக்காக, தாரளமாக செலவு செய்யுங்கள் என கட்சி தரப்பில் வந்த தகவலாம்.

மேலும், நீங்கள் கேட்ட காசு, விரைவில் வந்து சேரும்; தேர்தல் ஆணைய சோதனைகளால், பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது இவ்வாறு கூறுகின்றனர்.

click me!