ஓட்டுக்கு கேட்க போன திருமாவை துரத்திய கிராம மக்கள்... கெஞ்சிக் கேட்டும் விடாமல் விரட்டிய தரமான சம்பவம்!!

By sathish k  |  First Published Apr 12, 2019, 10:16 AM IST

கரூர் தொகுதியில் போட்டியிடும் துணை சபா தம்பிதுரை, அரக்கோணம் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், விசிக தலைவர் திருமாவளவனையும், ஊருக்குள் அனுமதிக்காத கிராம மக்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.


கரூர் தொகுதியில் போட்டியிடும் துணை சபா தம்பிதுரை, அரக்கோணம் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், விசிக தலைவர் திருமாவளவனையும், ஊருக்குள் அனுமதிக்காத கிராம மக்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில், திமுக கூட்டணி சார்பாக விசிக தலைவர்  திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம், சிதம்பரம்  தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பலுார், குன்னம் சட்டசபை தொகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்றிரவு 9:00 மணியளவில், ஒகளூர் கிராமத்துக்கு, திருமாவளவன் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வந்தார். 

Tap to resize

Latest Videos

அப்போது, அவரது வாகனத்தை, பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் மறித்தனர். எங்கள் ஊரில் உள்ள மயான கொட்டகையை, நாங்கள் புதிதாக கட்டும்போது, உங்கள் கட்சியை சேர்ந்த திராவிடமணி என்பவர், எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், நீங்கள் எங்கள் தெருவுக்குள் ஓட்டு சேகரிக்க வரக்கூடாது எனக் கூறினர்.'இது பற்றி எனக்கு தெரியாது' என திருமாவளவன் கெஞ்சிக் கேட்டும்  அவர்கள் சமாதானம் ஆகவில்லை. 

இதனால், திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே, நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குநுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மங்கலமேடு போலீசார் பேச்சு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திருமாவளவன் திரும்பிச் சென்றார்.

இதேபோல,  அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை கிராமமக்கள் ஊருக்குள் விடாமல் விரட்டியனுப்பிய சம்பவமும்.  கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை அந்த தொகுதி மக்களும் விரட்டி அனுப்பும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

click me!