கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வன்னியர்கள் வாக்கு வங்கி, பணபலம், சொந்த செல்வாக்கை மீறி ஜெகத்ரட்சகனை ஜெயிப்பாரா எனக் கேட்பதை விட சமாளிப்பாரா என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வன்னியர்கள் வாக்கு வங்கி, பணபலம், சொந்த செல்வாக்கை மீறி ஜெகத்ரட்சகனை ஜெயிப்பாரா எனக் கேட்பதை விட சமாளிப்பாரா என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, ஶ்ரீபெரம்பத்தூர், அரக்கோணம், வேலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதேபோல, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த வேட்பாளர்கள் லிஸ்டில் வாரிசுகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்துள்ளதைப்போலவே, ஏற்கனவே போட்டியிட்ட முக்கிய நட்சத்திரங்களான டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், எஸ். ஜகத்ரட்சகன், அ.ராசா உள்ளிட்டோரும் தங்களது பழைய தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர். இதில், ஜகத் ரட்சகனின் அரக்கோணம் தொகுதி செம்ம டஃப்பாக்கவே இருக்கும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
வட தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான அரக்கோணம் .வன்னியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி, இந்த தொகுதியில் காங்கிரஸ் ஐந்துமுறையும், தமிழ்மாநில காங்கிரஸ் ஒரு முறையும், அதிமுக திமுக தலா இரண்டு முறையும் பாமக ஒரு முறை வென்றுள்ளது. தற்போது களத்தில் உள்ள ஜகத்ரட்சகன் 1999,2009 ஆகிய இரண்டு தேர்தல்களில் பிரமாண்ட வெற்றியை பெற்றார். மத்திய இணையமைச்சராக இருந்த இவர், தற்போது மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுகவில் எம்.எல்.ஏவாக, எம்.பியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு "வீரவன்னியர் பேரவை" என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி பின்னர், திமுகவில் இணைத்துவிட்டார். தற்போது திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர். கடந்த 2014 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்ததால், மீண்டும் இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
பாமகவில் ஆக்ஷன் கிங் என ராமதாசும், அன்புமணியும் அழைக்கும் அளவிற்கு முக்கிய புள்ளியாக இருப்பவர் தான் ஏ.கே. மூர்த்தி, இவர் இரண்டுமுறை வெற்றிபெற்றும், இரண்டுமுறை தோல்வியும் அடைந்துள்ளார். வன்னியர்கள் வாக்கு வாங்கி பலமாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளை அடக்கிய அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜெகத்ரட்சகனின் பணபலம், வன்னியர்கள் வாக்குவங்கி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கு, வன்னியர்கள் மத்தியில் பாமகவுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மீறி மீறி ஜெயிப்பாரா என்பதை விட சமாளிப்பாரா என்பதே சந்தேகம் தான்.
இதெல்லாம் விட, உடைந்த அதிமுகவிலிருந்து தினகரனுக்கு ஒரு கூட்டம் அப்படியே தாவியதும், பாமகவை அறவே வெறும் தேமுதிகவும், பாமக மீது வன்னியர்களுக்கு இருக்கும் வெறுப்பும் செம்ம டஃப்பாக அமையும் என சொல்கிறார்கள்.