கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றிபெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, வரும் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறையைப் போல இந்த முறை அவ்வளவு லேசில் ஜெயிக்க வாய்ப்பில்லை என சொல்லபப்டுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றிபெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, வரும் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறையைப் போல இந்த முறை அவ்வளவு லேசில் ஜெயிக்க வாய்ப்பில்லை என சொல்லபப்டுகிறது.
கடந்தமுறை பிரமாண்ட வெற்றியை அடைந்த பாமக அதிமுக கூட்டணியில் தர்மபுரியை கேட்டு வாங்கிக்கொண்டார். அதிமுக கூட்டணியில் தர்மபுரியை பெறுவதில் உறுதியாக இருந்தது. இங்கு திமுக சார்பாக டாக்டர்.எஸ் செந்தில் குமார் வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். எப்படியும் இந்த தொகுதியை வென்றே ஆகவேண்டும் என்ற பிளானில் இருக்கிறார்களாம்.
திமுகவின் மாஸான பிளான்... தர்மபுரியில் டாக்டர்.எஸ் செந்தில் குமார் குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அதிக செல்வாக்கு கொண்டவர். வாக்குகளை அதிகம் பிரித்தெடுப்பார். அன்புமணி போல இவர் பெரிய பிரபலம் இல்லை, ஆனால் உள்ளூர் அரசியல் தெரிந்த நபர். திமுக கூட்டணியில் விசிக இருப்பதாலும், தர்மபுரியில் இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் சிதறாமல் திமுக வேட்பாளரான டாக்டர்.எஸ் செந்தில் குமார்க்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
"உள்ளடி வேலைகள்"
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியில் போட்டியிட்ட அன்புமணிக்கு, ஆதரவாக களத்தில் தீயாக வேலை பார்த்தது தேமுதிக. ஆனால், சேலத்தில் போட்டியிட்ட சுதீஷுக்கு உள்ளடி வேலை பார்த்து தோற்க்கடுத்ததாக சொல்லப்பட்டது. இதை மனதில் வைத்து அந்த தொகுதியில் தேமுதிக உள்ளடி வேலை பார்க்கும் என சொல்லப்படுகிறது.
"பழைய பகை"
தருமபுரி மாவட்டத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமைச்சருக்கு ஆண்மையிருந்தால் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக சிப்காட் வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி சவால் விடுத்திருந்தார்.
அதிமுகவின் அதிகாரத்தில் இருக்கும் நபர்களில் கால்கள் மண்ணில் புதைந்திருந்தால் அதற்கு இணையாக குழிதோண்டி, அந்த குழியில் விழுந்து காலைத் தொட்டு வணங்கும் அளவுக்கு ஆகச் சிறந்த அடிமையான அன்பழகன் என அமைச்சரை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டனர். அன்புமணிக்கு அமைச்சர் கேபி அன்பழகனுக்கும் நடந்த இந்த சண்டையால் என்னதான் பாமகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் அமைச்சருடனான பழைய பகைக்கு பழிதீர்த்துவிடுவாரோ என்ற பயத்தில் பாமக மத்தியில் உள்ளது.
"வெற்றிக்கு வாய்ப்பே இல்லை"
பாமகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. ஆனால் அன்புமணி அங்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது. அதிமுக அமைச்சருடனான பழைய பகை, தேமுதிக உள்ளடி வேலைகள், வன்னியர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, விசிக வாக்கு வங்கி என டாக்டர்.எஸ் செந்தில் குமார்க்கு பல வாய்ப்பு இருப்பதால் திமுக நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.