மகன் ஓபிஆர் வெற்றிக்கு ஹோமம் நடத்திய ஓபிஎஸ்... பூர்வீக வீட்டில் பழைய செண்டிமெண்ட்!!

By sathish k  |  First Published Mar 16, 2019, 10:31 AM IST

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனியில் வேட்பாளராக நிறுத்த தீவிர முயற்சி நடந்ததை அடுத்து விருப்பமனு கொடுத்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில் நேற்று  சிறப்பு ஹோமம் நடத்தினார்  பன்னீர்செல்வம். 


துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனியில் வேட்பாளராக நிறுத்த தீவிர முயற்சி நடந்ததை அடுத்து விருப்பமனு கொடுத்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில் நேற்று  சிறப்பு ஹோமம் நடத்தினார்  பன்னீர்செல்வம். 

பல ஆண்டுகாலமாகவே அதிமுகவின் ஆழமான நம்பிக்கை தளமாக இருக்கிறது தேனி மாவட்டம். அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி, நெடுஞ்செழியன், ஓபிஎஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு வென்ற தொகுதி.

Tap to resize

Latest Videos

ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் என்று இங்குள்ள ஒவ்வொரு தொகுதியும் இத்தலைவர்களுக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேனியில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் மாவட்டச் செயலாளர் சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆர்டி.கணேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஓபிஎஸ், பெரியகுளம் -  தேனி மெயின் ரோட்டில் உள்ள தன் பூர்வீக வீட்டில் இருந்து தான், சட்டசபை தேர்தல் பயணத்தை துவக்கினார். அந்த வீட்டின் ராசி ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் அமர வைத்தது.

ஓபிஎஸ்க்கு, பெரியகுளத்தில் தெற்கு, வடக்கு அக்ரஹாரங்களில் புதிய வீடுகள், பண்ணை வீடு போன்றவை இருந்தாலும், பழைய வீடு ராசியானது என்பதால். அந்த வீடு, அதிக புழக்கம் இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக, அந்த வீட்டை புதுப்பித்து, நேற்று முன்தினம் அதிகாலை, ஓபிஎஸ்  ஹோமம் நடத்தினார். மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அந்த வீட்டில் இருந்தே சென்டிமென்டாக தேர்தல் பணிகளை துவக்க வேண்டும் என ஓபிஎஸ் விரும்புவதாக கட்சியினர் தெரிவித்தனர்.

click me!