மெகா கூட்டணி அமைத்திருப்போம் அனால் உடன்பாடு எட்டப்படவில்லை!! தீபா அதிரடி...

By sathish kFirst Published Mar 15, 2019, 8:02 PM IST
Highlights

திமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம் என தீபா கூறியுள்ளார்.

திமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம் என தீபா கூறியுள்ளார்.

நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக  பலமான கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், தினகரன், கமல்  சரத்குமார், சீமான் தனித்துப் போட்டியிடப் போகிறார்கள்.  அனைத்து கட்சிகளும் தங்களது முடிவை அறிவித்திருக்கும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல்  மவுனமாகவே இருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென  தனது கட்சிக்காரர்களுக்கு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதில், 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டி  என்றும், 18 சட்டப் பேரவைத் இடைத் தேர்தலில் தனித்து போட்டி என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, "தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்களின் கட்சி நிர்வாகிகள் அதிமுகவுடன் விருப்பத்தை தெரிவித்தார்கள். நாங்கள் என்றுமே அதிமுகவை எதிர்த்து நாங்கள் பேசியது இல்லை. அதிமுக, பாஜவை கட்டுப்படுத்தியது போன்றவற்றால் கருத்து தெரிவித்தேன். 

அனைத்து தொகுதியிலும் வேட்பாளர் தேர்வு நடத்தப்படும். எந்தத் தொகுதியில் சிறப்பாக செயல்படமுடியுமோ அங்கு போட்டியிடுவோம். இரண்டு மூன்று மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுகவும் தினகரனும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

அதிமுக, தினகரன் எங்கள் பேரவை என அனைத்திலும் சேர்த்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். விருப்பமனு பெற்ற பின்னர் தமிழக அளவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். கூட்டணிக் கதவுகள் பெரும்பான்மை மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் எங்களை யாரேனும் அழைத்தால் அது குறித்து ஆலோசிப்போம். எங்களுக்கு இன்று வரை பல்வேறு அழுத்தத்துக்குப் பின்னும், நான் எங்களின்  தொண்டர்களின் ஆதரவோடு இருக்கிறேன். 

அதிமுக மட்டுமல்ல பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்பட்டது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பதான் தனித்துப் போட்டி முடிவு எடுத்தோம். எந்தக் காலத்திலும் சசி  குடும்பத்துடன், அதாவது தினகரன் உள்ளிடோருடன் கூட்டணி இல்லை. திமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம்.

வருகிற இடைத்தேர்தலில் அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் போட்டியிடுவதாக இருந்தால் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்படும் இதுவரை நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை என்றார்.

click me!