வீரமணி கேங்கை வெறித்தனமாக செருப்பு, கல்லால் வெளு வெளுன்னு வெளுத்த இந்து முன்னணியினர்... திருச்சியிலிருந்து தெறித்து ஓடிவந்த சம்பவம்

Published : Apr 05, 2019, 09:01 AM ISTUpdated : Apr 05, 2019, 09:03 AM IST
வீரமணி கேங்கை வெறித்தனமாக செருப்பு, கல்லால் வெளு வெளுன்னு வெளுத்த இந்து முன்னணியினர்...  திருச்சியிலிருந்து தெறித்து ஓடிவந்த சம்பவம்

சுருக்கம்

கி.தலைவர் கி.வீரமணி, இந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் கடுப்பான இந்து அமைப்பினர் வீரமணி கோஷ்டியை ஓட ஓட  விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கி.தலைவர் கி.வீரமணி, இந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.கவுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. ஆசிரியர் வீரமணி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களும் எழுப்பபட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க வந்திருந்தார். பெரம்பலூர் கூட்டத்தை முடித்து விட்டு 8.35க்கு திருச்சி பொதுகூட்டத்திற்கு வந்தார்.

ஆசிரியர் வீரமணி வருவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அவமான படுத்தி பேசியதாக கூறி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உடனே காந்திமார்கெட் போலிசார் செருப்பு வீசியது யார் என தேட துவங்கினார்கள். அதற்குள்ளாக கி.வீரமணி மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடித்து கீழே இறங்கிய போது எங்கிருந்த கற்கள் மேடையை நோக்கி விர் விர்ன்னு வேகமாக பாய்ந்தது. அப்போது மேடையில் இருந்த தி.கவினர் மீது அடிப்பட்டது. வீரமணியுடன் இருக்கும் குணசேகரன் அவருக்கு கண்ணில் கல் அடிப்பட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது.

இதற்கு இடையே ஆசிரியர் வீரமணி காரின் முன்பு இந்து முன்னியை சேர்ந்தவர்கள் சிலர் மறிக்க ஆரம்பித்தனர். உடனே அங்கிருந்த போலிஸ் அவர் உடனே அவர்களை கைது செய்து காந்திமார்கெட் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

18+ வயதினருக்கான முக்கிய அறிவிப்பு… மிஸ் பன்னிடாதீங்க.. ரொம்பவே வருத்தப்படுவீங்க…!
தேர்தல் அதிகாரி ரூமிற்கு சென்று அசால்ட் காட்டிய திமுக எம்பி... அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததால் பெரும் சர்ச்சை..! வைரலாகும் வீடியோ..