
தூத்துக்குடிக்குட்பட்ட விளாத்திக்குளம் தொகுதியில் உதயநிதி பேசியது:
மோடி ஆட்சிங்கிறது மோசடியான ஆட்சிங்க. ஒவ்வொரு வங்கிக் கணக்கிலையும் 15 லட்சம் போடுவேன்னு சொன்னார், அதை போட்டாரா? கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்னு சொன்னாரே, ஒழித்தாரா? நம்மளோட பணத்தை கார்ப்பரேட்களுக்குக் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சவருதானே மோடி.
தமிழ் நாட்டுல கஜா புயல் உள்பட எவ்வளவோ பிரச்சனை இருந்துச்சு. அந்த மக்களுக்கு ஆதரவு சொல்ல மோடி வந்தாரா? இப்போ தேர்தல் வரன்னால தமிழகத்துக்கு மூணு முறை வந்துட்டு போறாரு. தூத்துக்குடியில 13 பேரை சுட்டுக்கொன்னாங்களே, அதை மறந்துடுவோமா? சுட்டுக்கொன்னவங்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கையாவது விட்டாங்களா? இப்படிப்பட்ட இந்த ஆட்சி தேவையா? நீங்க எல்லோரும் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டா மோடி மட்டுமில்லீங்க, மோடியின் அடிமை ஆட்சியும் போய்டும்.
சினிமாவுல கதாநாயகன், வில்லன் இருப்பாங்க. திமுகவோட தேர்தல் அறிக்கையைப் பாருங்க, அது கதாநாயகன். மோடிதான் வில்லன். இங்கே போட்டியிடுற தமிழிசை கடலில் தாமரை மலரும்ம்னு சொல்றாங்க. கடலில் தாமரை மலருமா? அழுகிப்போய்டுங்க. கடலில் தாமரைல்லாம் மலராது. உதயசூரியன்தாங்க உதிக்கும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.