வித்யாலயா பள்ளிக்கு என்னோட சொந்த நிலத்தில் 5 ஏக்கரை கொடுத்திருக்கேன்... அல்லு தெறிக்கவிடும் பொள்ளாச்சி சிட்டிங் எம்பி!

By sathish k  |  First Published Apr 4, 2019, 7:01 PM IST

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் அருமையாக சொல்வார்....’’உலகின் தலை சிறந்த சொல்! செயல்’. அப்படின்னு. அப்படி என்னதான் செஞ்சு கொடுத்திருக்கிறார் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு மகேந்திரன்?....


வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் அருமையாக சொல்வார்....’’உலகின் தலை சிறந்த சொல்! செயல்’. அப்படின்னு. அப்படி என்னதான் செஞ்சு கொடுத்திருக்கிறார் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு மகேந்திரன்?....

ஜெயலலிதா மறைந்ததிலிருந்துன் அதிமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் எப்போது ஆட்சி களையுமோ? என்ன நடக்குமோ என்ற பீதியிலேயே தொகுதி பக்கம் சரிவர செல்வதில்லை ஆனால் சில அமைச்சர்கள் தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் பொள்ளாச்சி எம்பி அதிமுக சந்திக்கும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் சைலண்ட்டாக பல வேலைகளை செய்து முடித்திருக்கிறார். அந்த தைரியத்திலேயே மீண்டும் அதே தொகுதியில் தில்லாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், முன்னணி வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். அதில்,”கடும் நெரிசலான பொள்ளாச்சி முதல் கோவை வரையிலான சாலை வெறும் எழரை மீட்டர்தான் இருந்தது. அடிக்கடி விபத்து ஏற்பட்டு சாவுகள் சகஜமா நடந்துச்சு. இதுக்காக போராடி ஐநூறு கோடி ரூபாயை பெற்று, அதை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்திட்டிருக்கோம். இப்போ விபத்து பயமே இல்லாம இந்த நாலு வழிச்சாலையில பல லட்சக்கணக்கான மக்கள் பறந்துட்டிருக்காங்க ஆனந்தமா. நேரம் மிச்சம், எரிபொருள் மிச்சம். அதையெல்லாம் தாண்டி பல ஊர்களில் இருந்து கோவை நோக்கி அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் மக்களின் உயிர் காக்கப்படுறதுதான் ஆத்மார்த்த திருப்திங்க.

கொங்கு - தென்னக மக்களோட கனவு திட்டமான பொள்ளாச்சி - திண்டுக்கல் நேஷனல் ஹைவே திட்டம் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியிருக்குது. நிலம் கையகப்படுத்துற பணியை ஆரம்பிச்சுட்டோம். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவக்குவதற்காக என்னோட சொந்த நிலத்தில் ஐந்து ஏக்கரை கொடுத்திருக்கேன். அந்தப்பள்ளி இங்கே வர்றதாலே பல ஆயிரம் குடும்பங்களின் ‘மத்தியரசு கல்வி’ வரும் கல்வியாண்டு முதல் நனவாக போகுது. உடுமலை நகரில் மின் மயானம் முதல் கொழுமம் வரையிலான ரோடு உள்ளிட்ட பல ரோடுகளை அகலப்படுத்தியிருக்கிறேன். ஜிவிஜி கல்லூரி பெண்கள் பாதுகாப்பா நடந்து போக பேவர்  பிளாக் நடைபாதை அமைச்சு கொடுத்திருக்கேன். இது உடுமலைக்கு ரொம்ப புதுமையான திடம். இது தவிர பல பணிகளுக்ககா உடுமலைக்கு மட்டும் ஏழு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கேன். 

திருப்பூர் மற்றும் பழனி போறவங்க டவுனுக்குள் வந்து சிக்காமல் பைபாஸில் செல்லும் சாலைக்காக பதினொன்றரை கோடி ரூபாய் கேட்டிருக்கேன், அதில் ரெண்டரை கோடி கிடைச்சிடுச்சு. பெதப்பம்பட்டி டூ செஞ்சேரி மலை சாலை மற்றும் உயர்மட்டப் பாலங்களுக்காக பதினாலரை கோடி வாங்கி கொடுத்து வேலையும் முடிச்சாச்சு. சிந்திலுப்பு உப்பாறு ஓடையின் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக ரெண்டரை கோடி ரூபாயில் மாற்றிக் கொடுத்திருக்கேன்.

இப்படியாக...பொள்ளாச்சி சிடிசி மேடு முதல் ஆச்சிப்பட்டி நான்கு வழி சாலை, கோவை காளம்பாளையம் டூ இருட்டுப்பள்ளம் சாலை அகலப்படுத்துதல், பாலக்காடு சாலை முதல் எட்டிமடை ரயில் நிலை தொகுதி முழுக்க சாலைகள் மற்றும் பாலங்களுக்காக பல கோடிகள் வாங்கி கொடுத்திருக்கேன். அத்தனைக்கும் துல்லிய ஆதாரம் தர தயாரா இருக்கேனுங்க. 

உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பதினாறரை லட்சம் ரூபாய் செலவில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான எக்ஸ் ரே கருவியை பெற்று தந்திருக்கிறேனுங்க. எண்ணிக்கையில்லா ஏழை மக்களுக்கு பயன்படுது. 

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி முழுக்கவே விவசாய தொழில்தான் பிரதானம். இந்த மக்களின் பயன்பாட்டுக்காக பல இடங்களில் வாய்க்கால் விரிவாக்கம், ஓடைப்பாலங்கள்ன்னு அமைச்சிருக்கேன். பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி அருகில் ரெண்டு கோடி ரூபாய் செலவில் உயர் நடை மேடை அமைக்குறோம். பல ஆயிரம் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு தரும் அம்சம் இது. 

வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களிடம் பேசி 12 சாலைகள் அமைக்க அனுமதி பெற்றிருக்கோம். அதில் 9 சாலை பணிகள் முடிச்சு மக்கள் பயனுக்கு வந்தாச்சு. 

தென்னை விவசாயத்துக்கு நான் என்ன பண்ணினேன்னு கேக்கிறாங்க...கொப்பரை விலை கிலோ ஒன்றுக்கு 52.50 தான் முன்னாடி இருந்தது. விவசாயிகளின் நல் வாழ்வுக்காக பாராளுமன்றத்துல தொடந்து ஏழு முறை பேசி வலியுறுத்தியதால அதை 75 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் பண்ணியிருக்குது. அப்பவும் விடாமல் அதை நூற்று நாற்பது ரூபாயக உயர்த்த சொல்லி மக்களவையில் பேசிட்டே இருக்கேனுங்க. பழநியிலிருந்து கொழுமம் மற்றும் மறையூர் வழியாக சபரிமலைக்கு புதிய நேஷனல் ஹைவே அமைக்கும் திட்ட வடிவத்தை ரெடிபண்ணி மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதலுக்கு போராடிட்டு இருக்கேன்.” என்கிறார். 

இப்ப புரியுதா சொல்லை விட பெர்து செயல்ன்னு! ’என்னை ஜெயிக்க வெச்சீங்கன்னா, இதையெல்லாம் செஞ்சு தருவேன்! அப்படின்னு சொல்லுற வேட்பாளரை விட, உங்களுக்கு இதையெல்லாம் என்னால முடிஞ்சளவுக்கு பண்ணிக் கொடுத்திருக்கேன். இன்னும் நிறையவே பண்றதுக்கு வாய்ப்பு கொடுங்க!ன்னு சொல்லுற வேட்பாளர்தானே முக்கியம்.’
அது மகேந்திரனாகத்தானே இருக்க முடியும்!

click me!