ஸ்டாலின் ஸ்டைலில் மார்க்கெட், கடைவீதியில் பிரசாரம் பண்ணப்போகும் எடப்பாடி... சொந்த ஊரில் அதகளம்!

Published : Apr 16, 2019, 10:29 AM IST
ஸ்டாலின் ஸ்டைலில் மார்க்கெட், கடைவீதியில் பிரசாரம் பண்ணப்போகும் எடப்பாடி... சொந்த ஊரில் அதகளம்!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்தமான மாவட்டமான சேலம் மாநகரில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்படுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்தமான மாவட்டமான சேலம் மாநகரில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்படுகிறார்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைப்பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து  ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் , நடைப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் ,  மு.க.ஸ்டாலின் பாணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்தமான மாவட்டமான சேலம் மாநகரில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட உள்ளார். 

கடைசி நாளான இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் , பட்டைக்கோவில், தேர்வீதி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்து நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

18+ வயதினருக்கான முக்கிய அறிவிப்பு… மிஸ் பன்னிடாதீங்க.. ரொம்பவே வருத்தப்படுவீங்க…!
தேர்தல் அதிகாரி ரூமிற்கு சென்று அசால்ட் காட்டிய திமுக எம்பி... அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததால் பெரும் சர்ச்சை..! வைரலாகும் வீடியோ..