9 மணி நேரம்.. 6 சட்டமன்றத் தொகுதிகள்,120 கோடி ரூபாய்! பணப்படுட்டுவாடாவை அம்பலமாக்கிய தராசு ஷியாம்!

By sathish kFirst Published Apr 15, 2019, 8:46 PM IST
Highlights

ஓட்டுக்கு 1000/- வீதம் முழுப் பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக முடித்துள்ளது. 9 மணி நேரம்! 6 சட்டமன்றத் தொகுதிகள்! 120 கோடி ரூபாய் ! நிச்சயம் இது கின்னஸ் சாதனை என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருக்கிறார்.

ஓட்டுக்கு 1000/- வீதம் முழுப் பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக முடித்துள்ளது. 9 மணி நேரம்! 6 சட்டமன்றத் தொகுதிகள்! 120 கோடி ரூபாய் ! நிச்சயம் இது கின்னஸ் சாதனை என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருக்கிறார்.

நாளையொடு தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், அரசியல் காட்சிகள் கடைசிகட்ட ஆயுதத்தை எடுத்துள்ளது. அதாவது பணப்பட்டுவாடா செய்யும் முனைப்பில் இருக்கிறது இதைத் தடுக்கும் முனைப்பில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தேர்தல் படர்க்கும் படையினரின் சோதனையில் ஆவணங்கள் இன்றி பணம் முதல் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா நடக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் அதிமுகவைச் சேர்ந்த எக்ஸ் சேர்மன் சபிதா அருண் பிரசாத் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி ஒரு வாக்குக்கு ரூ. 1,000 என்பதன் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக தராசு ஷ்யாம் கூறியுள்ளார். மேலும், பணப்பட்டுவாடாவை எளிதாக்கும் வகையில் அந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது, மின்சாரத் துறை மீதும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் தகவல் கசிந்தது.

தேனியில் நேற்று இரவு 9 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிக்குள் ஓட்டுக்கு 1000/- வீதம் முழுப் பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக முடித்துள்ளது. 9 மணி நேரம்! 6 சட்டமன்றத் தொகுதிகள்! 120 கோடி ரூபாய் !

நிச்சயம் இது கின்னஸ் சாதனை.

வாழ்க பறக்கும்படைகள், வருமானவரி அதிகாரிகள், & தேர்தல் ஆணையம்.

— shyam tharasu (@TharasuShyam)

இந்நிலையில், இந்த தகவல் சந்தேகத்தின் அடிப்படையில் இருக்கும் சூழலில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தனது ட்விட்டர் பதிவில், தேனியில் நேற்று இரவு 9 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிக்குள் ஓட்டுக்கு 1000/- வீதம் முழுப் பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக முடித்துள்ளது. 9 மணி நேரம்! 6 சட்டமன்றத் தொகுதிகள்! 120 கோடி ரூபாய் ! நிச்சயம் இது கின்னஸ் சாதனை. வாழ்க பறக்கும்படைகள், வருமானவரி அதிகாரிகள், & தேர்தல் ஆணையம் என பதிவிட்டுள்ளார்.

click me!