மெட்ரோ பக்கத்தில் 25 அடுக்கு அப்பார்ட்மெண்ட்... கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் பங்க்!! கூட்டணி பேரத்தில் வெளியான ரகசியம்!!

By sathish kFirst Published Mar 10, 2019, 11:39 AM IST
Highlights

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கவலைக்கிடமாக கிடக்கிறது தேமுதிக, ஆனால், கூட்டணி அமைப்பதாக பிஜேபியிடம் வாக்குறுதி கொடுத்து சொந்த வேலைகளை தேமுதிகவின் முக்கிய புள்ளி ஒருவர் பிஜேபி மூலம் சாதித்துக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

ஒரே நேரத்தில் மாறி மாறி துட்டுக்கும் சீட்டுக்கு டீல் பேசி வந்ததால் காண்டான திமுக தேமுதிகவின் சுயரூபத்தை  மீடியா முன் அம்பலமாகியது. அதிமுகவில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அக்கட்சி தன்னந்தனியாக தவிக்கிறது. இதெல்லாம் சுதீஷ் மற்றும் பிரேமலதாவால் மட்டுமல்ல தேமுதிக அந்த தேமுதிக முக்கய புள்ளியும் இந்த ஊசலாட்டத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

அதிமுக பிஜேபி கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. இக்கூட்டணியில் தேமுதிகவை எப்படியாவது சேர்க்க வேண்டுமென பிஜேபி விரும்பியது. இத்தேர்தலில் அக்கட்சிக்கு 2.4 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என உளவுத்துறை அறிக்கை அளித்திருந்ததே அதற்கு காரணம். இதனால் அக்கட்சியையும் சேர்த்தால் பலம் அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும் என பிஜேபி கணக்கு போட்டது. இதற்கு ஏற்பாடு செய்யும்படி முன்பே அதிமுகவுக்கு உத்தரவிடப்பட்டது. அவ்விருப்பத்தை பிஜேபி மூத்த தலைவர்கள் தேமுதிக தலைமையிடமும் தெரிவித்தனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தேமுதிகவின் முக்கிய புள்ளி ஒருவர்,  கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைக்க பிஜேபியிடம் உதவி கோரியுள்ளார். இதற்கு உடனடியாக மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்ட மண் பரிசோதனை பணிகள் நடக்கின்றன. இதற்கான வழித்தடங்கள் மேப் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அந்த வழித்தடம் செல்லும் பகுதியில் தேமுதிகவின் முக்கிய புள்ளி 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். சற்று தொலைவில் அமைக்க திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் பாதை தனது குடியிருப்பு அருகே கொண்டு வந்து, மெட்ரோ ஸ்டேஷன்  அமைக்க வேண்டும் என பிளான் புள்ளி இருக்கிறார். அதன்படி பாதை மாற்றுவதற்கான ஏற்பாடும் நடக்கிறது. தேமுதிகவில் முடிவெடுக்கும் பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளி பிஜேபி, மூலம் பல காரியங்களை சாதித்துக் கொண்டதால் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தினார். திமுக பக்கம் செல்ல வேண்டும் என நிர்வாகிகள் விருப்பத்தையம் கூட நிராகரித்து, இழுபறியில் அதிமுகவிடம் பேச்சு நடத்தியதற்கு இதுவே தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், பாமகவுக்கு 7 தொகுதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், தங்களுக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தியது. 

இதில் சமரசம் செய்ய முயன்ற பிஜேபி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா சீட்  தருவதாக சொல்லியும் தேமுதிக கேட்கவில்லை. இதனால் அதிமுக பிஜேபி தலைமை டோட்டலாக அப்செட் ஆனதால் இழுபறி நீடித்தது, ஆனாலும் அந்த முக்கிய புள்ளி நினைத்தது சக்ஸஸ் தான்.

 

click me!