என்ன நல்லா பாருங்க உங்களுக்காகவே உழைச்சு.. உழைச்சு.. என்னோடு மூஞ்சி கருத்துப்போச்சி... கருத்து போன என் மூஞ்சைப்பார்த்தாவது ஓட்டுப் போடுங்க என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.
என்ன நல்லா பாருங்க உங்களுக்காகவே உழைச்சு.. உழைச்சு.. என்னோடு மூஞ்சி கருத்துப்போச்சி... கருத்து போன என் மூஞ்சைப்பார்த்தாவது ஓட்டுப் போடுங்க என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.
துணை சபாவும், கரூர் தொகுதியின் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பிதுரை எங்கு ஓட்டுக்கு கேட்டுப் போனாலும், காலி குடத்தை வைத்து கொண்டு ஊர் மக்கள் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு ஓட ஓட துரத்தியடிக்கும் சம்பவம் நடந்தேறி வருகிறது. ஏற்கனவே 2 முறை ஜெயிச்சும், தொகுதிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற கோபம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
அதுமட்டுமா, கேள்வி கேட்டால் நேருக்கு நேராகவே தம்பிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அனைத்தையும் சமாளித்து பேசுகிறார் தம்பிதுரை.சில இடங்களில், "இஷ்டம் இருந்தா ஓட்டு போடுங்க.. இல்லாட்டி போங்க... ஒரு ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் இதுக்குன்னு விழ முடியாது என்று தெனாவட்டாக பேசிவிட்டு நகர்கிறார். ஆனாலும் நிறைய இடங்களுக்கு தம்பிதுரை சென்று ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. நாளுக்கு நாள் இப்படி அதிருப்தி, எதிர்ப்பு கூடுவதால், பிரச்சாரத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார்.
தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பிரசாரத்தில் பேசிய விஜயபாஸ்கர், "என் கடுமையான உழைப்பை பார்த்து... உங்களுக்காகவே உழைச்சு உழைச்சு கருத்த என்னுடைய மூஞ்சாப் பார்த்து... தூங்காத என் கண்களை பார்த்து... இதுவரை யாரையும் குறையே சொல்லாத என்னை பார்த்து... எனக்காக எங்க அண்ணனுக்கு இரட்டை இல்லை சின்னத்தில் ஓட்டுப்போடுங்க" என்றார் சிரித்தபடியே பேசினார். என்னதான் காமெடி பண்ணாலும், அந்த தொகுதியில் தம்பிதுரை ஒண்ணுமே பண்ணலன்னு அவங்களும் காண்டுல இருக்கறது விஜயபாஸ்கர் கண்ணுக்கு தெரிந்ததை மறுக்கமுடியுமா?