பாமகவிலிருந்து மாநில துணைத் தலைவர் அதிரடி விலகல்... அதிர்ச்சியில் தொண்டர்கள்...

By sathish k  |  First Published Apr 10, 2019, 2:35 PM IST

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து  கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் களத்தில் வாக்கு வேட்டை நிகழ்த்திவருகின்ற இந்த சூழலில் பாமகவிலிருந்து அந்த கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியது பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணியில்  ஏழு தொகுதிகளை வாங்கிக்கொண்டு பாமகவில் சேர்ந்தது. இந்த கூட்டணி முடிவால் பாமக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை தலைவர் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார். அதேபோல ராஜேஸ்வரி பிரியாவும் விளக்கினார். 

இந்நிலையில், பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது பாமகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,  கூட்டணி பற்றி தலைமை முடிவெடுத்துவிட்டதே என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பிரசாரத்திற்கு போகும் இடங்களில், நீங்க எவ்வளவு காசு வாங்கிட்டு கூட்டணிவச்சீங்க? என நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்கிறார்கள். அதனால் அவசரப்பட்டு அல்ல நன்கு யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றார்.

click me!