திட்டுறதுக்கு ரூ.5 லட்சம் சம்பளம்... ஆபாச லீலைகளுக்காக பெண் தோழிகளுக்கு அள்ளிக் கொடுத்த பப்ஜி மதன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 18, 2021, 04:42 PM IST
திட்டுறதுக்கு ரூ.5 லட்சம் சம்பளம்... ஆபாச லீலைகளுக்காக பெண் தோழிகளுக்கு அள்ளிக் கொடுத்த பப்ஜி மதன்...!

சுருக்கம்

மதன் தன்னுடைய வீடியோக்களை வைரலாக்குவதற்காக சிலருக்குக் காசு கொடுத்து வீடியோ வெளியிட வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஆன்லைனில் வீடியோ கேம் டிரிக்ஸ் சொல்லி கொடுப்பதாக கூறி யூ-டியூப்பில் மதன் குமார் என்பவர் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய வீடியோக்களை பிரபலமாக்குவதற்காகவே பெண்களை மிகவும் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து மதன் மீது புகார்கள் குவிய ஆரம்பித்ததை அடுத்து விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவானார். 

இதையடுத்து சேலம் சென்ற போலீசார் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை அழைத்து விசாரித்தனர். அப்போது மதனுடைய யூ-டியூப் சேனலுக்கு அட்மினாக செயல்பட்டதே கிருத்திகா தான் என்பதும், வீடியோவில் பேசும் பெண் குரல் கிருத்திகா உடையது தான் என்றும் தெரியவந்தது. 

இப்படி காதில் கேட்க கூசும் விதமாக பேசி மதன் யூ-டியூப் வீடியோ வெளியிட்டதால் மாதன்ம் ரூ.7 லட்சம் வரை சம்பாதித்தது கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மதன் ஆபாசமாக பேசி, பேசியே சம்பாதித்த 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி வங்கி கணக்கில் இருந்த 4 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. சொகுசு வாழ்க்கைக்காக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாது, போலீசாருக்கு சவால் விட்டு தலைமறைவான மதனை தனிப்படை போலீசார் தருமபுரியில் கைது செய்தனர். 

இந்நிலையில் மதன் தன்னுடைய வீடியோக்களை வைரலாக்குவதற்காக சிலருக்குக் காசு கொடுத்து வீடியோ வெளியிட வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வீடியோவையும், தன்னையும் பற்றி திட்டுவதற்காகவும், புகழ்ந்து பேசுவதற்காக ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை வாரி வழங்கியுள்ளார். மதனுடன் வீடியோவில் பல பெண்களையும் ஆபாசமாக பேச வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களுக்காக மதனிடம் பெண் ஒருவர் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி பணத்து ஆசை காட்டி பல பெண்களையும் தன்னுடைய வலையில் மதன் விழ வைத்துள்ளார். தற்போது மதனின் பெண் தோழிகளையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!