கஞ்சா போதையில் 8 பேர் கொண்ட கும்பல் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடந்துனர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா போதையில் 8 பேர் கொண்ட கும்பல் அரசு பேருந்தை மறித்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள், சோழபுரம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து கும்பகோணம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. பழைய பாலக்கரை அருகே வந்த பேருந்தை 8 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என்னுடைய ஆசைக்கு இணங்கனா போதும்! உன்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன்! மறுத்த பெண்ணை கதறவிட்ட தானு.!
பின்னர் பேருந்துக்குள் ஏறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கியதோடு அவர்களை பேருந்தில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த இரு செய்தியாளர்கள் இச்சம்பவத்தை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த மர்ம கும்பல் செய்தியாளர்களையும் கடுமையாக தாக்கி உள்ளது. இத்தகவல் அறிந்து கும்பகோணம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பலை சேர்ந்த 6 பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில் 2 பேரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பல்லடம் அருகே விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய சொகுசு கார்.. கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு என்ன ஆச்சு?
இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற ஆறு பேரில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் பேருந்து நடத்துனர் மற்றும் செய்தியாளர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.