மத்திய அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் அதிகாலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் கவுசல் கிஷோரின் இல்லத்தில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை அடுத்துள்ள பெகாரியா கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் அதிகாலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பரான வினய் ஸ்ரீவஸ்தவா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினய் ஸ்ரீவஸ்தவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் துப்பாக்கி மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோரின் மகனுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.