
கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபிதா பானு (வயது 50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜூதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவர் இறப்புக்கு பின் ராஜேந்திரன் என்ற நபருடன் கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானு தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ரூபிதா பானுவை சந்திக்க அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேந்திரன் ரூபிதா பானுவை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக அடித்து கொலை - அதிர்ச்சியில் உறவினர்கள்
கீழே விழுந்த ரூபிதா பானுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுதும் ஆத்திரம் தீராத ராஜேந்திரன் அவரை அடித்து கொலை செய்துள்ளார். இதில் ரூபிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு காவல் துறையினர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.