திருப்பூரில் தனியார் மருத்துவமனை வரவேற்பாளராக இருந்த சத்யஸ்ரீ (21) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நரேந்திரன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
திருப்பூர் அருகே காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தனியார் மருத்துவமனை வரவேற்பாளராக இருந்த சத்யஸ்ரீ (21) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நரேந்திரன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- 17 வயது சிறுவனை இதற்காக தான் கொன்றேன்! 5 துண்டாக வெட்டி கூறுபோட்ட பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் கைது.!
இந்நிலையில், இன்று காலை சத்யஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு நரேந்திரன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலி என்று கூட பாராமல் சத்யஸ்ரீ கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், அதே கத்தியில் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க;- பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி சத்யஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். காதலனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.