தனிமைப்படுத்தப்பட்ட விரக்தி..! வெறியில் மூதாட்டியின் குரல்வளையை கடித்துக் கொன்ற கொடூர வாலிபர்..!

Published : Mar 28, 2020, 09:53 AM ISTUpdated : Mar 28, 2020, 09:58 AM IST
தனிமைப்படுத்தப்பட்ட விரக்தி..! வெறியில் மூதாட்டியின் குரல்வளையை கடித்துக் கொன்ற கொடூர வாலிபர்..!

சுருக்கம்

கடந்த ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மணிகண்டன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இதில் அவர் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென வீட்டில் இருந்து வெளியே நிர்வாணமாக ஓடி வந்துள்ளார். 

தேனி மாவட்டம் போடி ஜக்கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் மணிகண்டன்(34). இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்ய சென்றிருந்த இவர் கடந்த 21ஆம் தேதி ஊர் திரும்பனார். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மணிகண்டனையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமை படுத்தினர்.

கடந்த ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மணிகண்டன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இதில் அவர் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென வீட்டில் இருந்து வெளியே நிர்வாணமாக ஓடி வந்துள்ளார். அதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெறி பிடித்தவர் போல ஓடிவந்த மணிகண்டன் அவரது வீட்டின் அருகே இருந்த நாச்சியம்மாள்(74) என்கிற மூதாட்டியை தாக்கி உள்ளார். மேலும் அவரது குரல் வளையை கடித்து படுகாயத்தை உண்டாக்கி இருக்கிறார்.

காலையில் நற்செய்தி..! கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட 21 வயது தமிழக இளைஞர்..!

இதில் மூதாட்டி நாச்சியம்மாள் பலத்த காயம் அடைந்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் நாச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவலர்கள் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!