மதுரை கொரோனா முகாமில் இருந்து தப்பியவர் காதலியை கல்யாணம் செய்தது எப்படி..!!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2020, 8:09 PM IST
Highlights

மதுரை கொரோனா தடுப்பு  சிறப்பு முகாமில் இருந்து தப்பிய சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அம்பலமாகியிருக்கிறது. அவனியாபுரம் போலீஸ் அவரை பிடித்து மீண்டும் சிறப்பு முகாமில் ஒப்படைத்திருக்கிறது.  

T.Balamurukan

மதுரை கொரோனா தடுப்பு  சிறப்பு முகாமில் இருந்து தப்பிய சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அம்பலமாகியிருக்கிறது. அவனியாபுரம் போலீஸ் அவரை பிடித்து மீண்டும் சிறப்பு முகாமில் ஒப்படைத்திருக்கிறது.

 

துபாயில் இருந்து மார்ச்  23 ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தவர்களில் சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தை சேர்ந்த விஜய்.வயது 22. இவர் மதுரை சின்ன உடைப்பு பகுதியிலுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தார்.
 இந்தநிலையில்,நேற்று மாலை முதல் திடீரென  அவர் மாயமானது தெரிந்தது. இது குறித்து மதுரை மாவட்ட  சுகாதாரத் துறை அலுவலர்  முத்துவேல் என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரின், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்ராஜ் தலைமையில் போலீஸார்  பல்வேறு இடங்களில்  தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில், அவரது மொபைல் எண்ணை,போலீஸ் ட்ராக் செய்தது.அதை வைத்து பார்க்கும் போது அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.அதை வைத்து போலீஸ் பின் தொடர்ந்தது.


 சிவகங்கை அருகில்,ஒரு பெண்ணுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை பிடித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர் பகுதியில்  காதலித்த பெண்ணுக்கு  பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, அவரை பார்க்கச் சென்றதாகவும், அந்த பெண்ணை  தனியாக அழைத்துச் சென்று  விஜய்  திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர் திருமணம் செய்த பெண் மைனர்   என்பதால் அப்பெண்ணின் பெற்றோர் கொடுத்த  புகாரின்பேரில்,  சிவகங்கை தாலுகா  போலீஸார் விஜய் மீது கடத்தல் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையில், விஜயை அவனியாபுரம் போலீஸார் சின்ன உடைப்பு கொரோனா சிறப்பு முகாமில் ஒப்படைத் தனர். விஜய் திருமணம் செய்த சிறுமியை சிவகங்கை அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து  தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

click me!