
திரையரங்கில் துப்பாக்கி சூடு
கே.ஜி.எப் திரைப்படம் கடந்த13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு திரையரங்கை நோக்கி குவிந்து வருகின்றனர். தமிழக்திலும் 400க்கும் மேற்பட்ட திரையரங்கில் கே.ஜி.எப் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஷிகான் நகரில் உள்ள திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக கே.ஜி.எப் திரைப்படம் ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி இரவு காட்சியின் போது யாஷ் எதிரிகளை துப்பாக்கியால் சுட்டபோது திரையரங்கிலும் உண்மையான துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.
திரையரங்கில் மோதல்
திரைப்படத்தில் தான் துப்பாக்கி சத்தம் கேட்டதாக நினைத்த நிலையில் உண்மையிலேயை துப்பாக்கி குண்டு பாய்த்து ஒருவர் திரையரங ்கில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த நபரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்த துப்பாக்கி சண்டை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முகலி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் சிவபூர் என்பவர் கேஜிஎப் படம் பார்பதற்காக திரையரங்கம் வந்துள்ளார். அப்போது தனது இருக்கைக்கு எதிர் இருக்கையில் வசந்த் கால் வைத்து படம் பார்த்துள்ளார். இதனால் வசந்திற்கும் எதிர் சீட்டில் அமர்ந்து படம் பார்த்த மர்ம நபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தான் கொண்டுவந்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த மர்ம நபர் வசந்தை சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் தலைமறைவு
துப்பாக்கியின் இரண்டு குண்டுகள் வசந்தின் வயிற்று பகுதியில் பாய்ந்த நிலையில் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஷிகான் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். கே.ஜி.எப் படத்தில் துப்பாக்கி சண்டை காட்சிகளுக்கு மத்தியில் திரையரங்கில் உண்மையாக நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.